- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் கிளைமேக்ஸில் அப்படி ஒரு தரமான சம்பவம் இருக்கிறதா? - லீக் ஆன சீக்ரெட்டால்...

ஜனநாயகன் படத்தில் கிளைமேக்ஸில் அப்படி ஒரு தரமான சம்பவம் இருக்கிறதா? – லீக் ஆன சீக்ரெட்டால் தளபதி ரசிகர்கள் குஷி!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வௌியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் ரஜினி கமல் அஜீத்குமார் தனுஷ் போன்றவர்களும் பங்கேற்க விஜய் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது ஜனநாயகன் படத்தின் இசை வௌியீட்டு விழா என்பது மட்டுமின்றி தமிழ் சினிமா சார்பில் விஜய்க்கு நடத்தப்படும் பிரிவு உபசார விழாவாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் ஜனநாயகன் படத்துக்கு பிறகு இனி நடிக்கப் போவது இல்லை என்று ஏற்கனவே விஜய் அறிவித்து விட்டார். அதனால் சினிமாவை விட்டு விலகிய விஜய்க்கு இது வழியனுப்பு விழாவாக அமையப் போகிறது.

- Advertisement -

இந்த விழாவில் பங்கேற்க படக்குழுவினர் அனைவரும் மலேசியாவுக்கு செல்கின்றனர். இதில் முக்கிய படக்குழு சார்ந்தவர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் பணியாற்றிய அனைவருமே இந்த விழாவில் கலந்துக்கொள்ளவும் அவர்களுக்கான போக்குவரத்து தங்குமிடம் உணவு வசதி என முதல் தரத்தில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் நடிகர் விஜய் அரசியல் பேசக் கூடாது, அரசியல் சார்ந்த கருத்துகளை சொல்லக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியா போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் ஏதும் குட்டிக்கதை சொல்வாரா என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் படம் முடிந்த பிறகு 5 நிமிடங்கள் கூடுதலாக படத்தில் காட்சிகள் வரும். அதில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு முதல் அவர் நடித்த 69 படங்களில் இருந்தும் பல முக்கிய காட்சிகள் கிளிப்பிங் காட்சிகளாக திரையில் வரும்.

அதாவது ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் என்பதால் அவருக்கு வழியனுப்பு செய்யும் விதமாக கிளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு அவர் நடித்த 69 படங்களின் தொகுப்பை சில காட்சிகளாக தொகுத்து இப்படி 5 நிமிட காட்சியாக அதில் இணைத்துள்ளனர். இது தளபதி ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்