- Advertisement -
Homeபொழுதுபோக்குபாதியில் நிற்கும் நடிகர் சங்க கட்டிடம், நிதி நிர்வாகத்தில் தடுமாறும் நடிகர் சங்க நிர்வாகிகள்; ...

பாதியில் நிற்கும் நடிகர் சங்க கட்டிடம், நிதி நிர்வாகத்தில் தடுமாறும் நடிகர் சங்க நிர்வாகிகள்; ரஜினி, கமலுடன் ஆலோசித்த பின் முக்கிய முடிவு – விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கம் திரைப்பட கலைஞர்களின் பாரம்பரியம் மிக்க ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு இந்த அமைப்பு நடிகர்களின் உரிமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் சார்ந்ததாக செயல்பட்டு வருகிறது. திரைத்துரையில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வு தீருகிறது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இருந்த பல கோடி ரூபாய் கடனை, கடந்த 2000ம் ஆண்டுகளில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் வந்த பெரும் தொகையை பயன்படுத்தி, கடன்களை அடைத்தார். அதுதவிர 1.75 கோடி ரூபாய் சங்கத்தின் இருப்பாகவும் வைத்தார்.

விஜயகாந்துக்கு பிறகு ராதாரவி, சரத்குமார், இப்போது நாசர், விஷால், கார்த்தி என பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். ஆனால் இப்போதைய சூழலில் சங்கத்தில் பெரிய அளவில் செயல்பாடும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் இல்லை. குறிப்பாக நிதி வரவு செலவு விவகாரங்களில் பின்னடைவே நிலையே நீடிக்கிறது.

குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டத் துவங்கி ஆண்டுக்கணக்கில் அந்த பணி பாதியில் நிற்கிறது. கட்டட கட்டுமான பணிகளுக்காக பெரிய நடிகர்கள் ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ், நெப்போலியன், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா ரூ. 1 கோடியை சங்கத்துக்கு நிதியாக வழங்கி இருக்கின்றனர்.

இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த நடிகர் சங்கத்தின் கட்டட கட்டுமான பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்ட நிலையில், இன்னும் பல கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே இந்த பணியை தடையின்றி தொடர முடியும் என்ற நிலையில், நடிகர் சங்கம் தடுமாறி வருகிறது. பெரிய அளவில் சங்கத்துக்கு தொகை கிடைத்தால் மட்டுமே கட்டுமான பணியை நிறைவு செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடனும் ஆலோசித்து உள்ளனர். அதாவது மிக விரைவில் வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் வரும் பெரும் தொகையை கொண்டு சங்க கட்டிடடத்தின் கட்டுமான பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

சற்று முன்