- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வாட்டி நீ வந்தே ஆகணும் என்று சொன்னது அவர்தான் - சபரிமலைக்கு இருமுடி கட்டிச்...

இந்த வாட்டி நீ வந்தே ஆகணும் என்று சொன்னது அவர்தான் – சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்ற நடிகர்கள் கார்த்தி ரவி மோகன்!

- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மெய்யழகன். அரவிந்தச சாமியும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது நடிகர் கார்த்தி சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். பிறகு கைதி 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரவி மோகனும் நடிகர் கார்த்தியும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு நேரில் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது மலையாள செய்தி சேனல்கள் நடிகர் கார்த்தியிடம் சபரிமலை பயண அனுபவம் குறித்து கேட்ட நிலையில் நடிகர் கார்த்தி பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அப்போது நடிகர் கார்த்தி கூறியதாவது, சபரிமலைக்கு வருவது இதுதான் பர்ஸ்ட் டைம். அதுவும் ஜெயம் ரவியுடன் வந்திருக்கிறேன். நான் ரொம்ப லக்கி. முதல் தடவையே ஹரிவராசனம் பார்க்கும் போது ரொம்ப பக்தி பரவசமா இருந்தது. இப்போ மகரஜோதிக்கு வரவேண்டும் என்று ஆசையா இருக்குது.

பர்ஸ்ட் டைம் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. இப்போ நான் சுவாமியை பார்க்க மட்டும்தான் வந்தேன். பிரார்த்தனை எதுவும் இல்லே. வேண்டுதல் எதுவும் இல்லே. பிரார்த்தனை மட்டும்தான். ரொம்பவும் நல்லா இருந்தது.

- Advertisement -

வயசானவங்க குழந்தைங்க எல்லாம் இங்கே வர்றதை பார்க்கும் போது இவ்ளோ நாள் இங்கே வரலையேன்னு இப்போ தான் தெரியுது. இதுதான் பர்ஸ்ட் டைம் வர்றது ரொம்பவும் சந்தோஷம். அடுத்த முறையும் வரணும். கண்டிப்பா ஜோதி அப்போ நான் வரணும். ஆசையா இருக்கு. கண்டிப்பாக வரணும்.

நடிகர் ஜெயம் ரவிதான் என்னை கூட்டீட்டு வந்தார். இந்த வாட்டி நீ வந்தே ஆகணும் என்று என்னை கூட்டீட்டு வந்தது ரவிதான். நாங்க ஜெயராம் சார் கூட வரலாம் என்று பிளான் பண்ணினோம். நெக்ஸ்ட் டைம் வரும்போது ஜெயராம் சார் கூட வரணும். நான் கன்னிசாமி. ஜெயம் ரவி சீக்கிரம் குருசாமி ஆக பிரமோட் ஆகி விடுவார் என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்