- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா? , நடிகை குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த நடிகை அம்பிகா -...

இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா? , நடிகை குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த நடிகை அம்பிகா – சீக்கிரமா கூப்பிட்டு போஸ்டிங் கொடுப்பாங்களா?

- Advertisement -

நடிகை அம்பிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 1980்களில் இருந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அம்பிகாவுக்கும், அவரது சகோதரி ராதாவுக்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு தனியிடம் உண்டு. இருவருமே தமிழ் சினிமாவில் முடிசூடா ராணிகளாக, அந்த காலகட்டத்தில் கோலோச்சியவர்கள்.

நடிகை அம்பிகா, முதல் திருமணம் செய்த நிலையில் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், முதல் கணவரை பிரிந்து 2வது திருமணம் செய்தார். அந்த திருமணமும் சில ஆண்டுகளில் விரக்தியை தர, 2வது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில்,சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் கலந்துக்கொள்கிறார். அவன் இவன் போன்ற சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்தால் நடித்து வருகிறார். இப்போதும் தங்கை ராதாவுடன் ஒற்றுமையாக இருக்கும் அம்பிகா, அவரது குடும்பத்தில் ஒருவராக மூத்தவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை குஷ்பு, திமுக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியிலும், திமுகவினர் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியது. பாஜகவில் இப்போது இருந்து வரும் குஷ்பு, துவக்கத்தில் முதலில் திமுக கட்சியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து நடிகை அம்பிகா கூறுகையில், யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ, அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால், அமைதியாக இருங்கள். பிச்சை என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். ஐந்து ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான், என்று நடிகை அம்பிகா கூறியிருக்கிறார்.

நடிகை அம்பிகா, தமிழ் சினிமாவில் குஷ்புவுக்கு சீனியர். அதே நேரத்தில் மகளிர்க்காக உள்ளிட்ட சில படங்களில் அம்பிகாவும், குஷ்புவும் ஒன்றாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் குஷ்புவின் கருத்துக்கு எதிராக அம்பிகா கருத்து சொல்லியிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, நடிகைகள் பலரும் அரசியலுக்கு வருவது போல, அம்பிகாவுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா, திமுகவுல சீக்கிரம் போஸ்ட்டிங் கிடைக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் பொதுவான ஒரு நல்ல கருத்தை தான் கூறியிருக்கிறார் என்றும் பலர் பாராட்டுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்