- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் உண்மையை சொன்னா ராதா தான் ஜெயிலுக்கு போகணும், நகையை பார்த்தாலே ராதா ஒரு மாதிரி...

நான் உண்மையை சொன்னா ராதா தான் ஜெயிலுக்கு போகணும், நகையை பார்த்தாலே ராதா ஒரு மாதிரி ஆயிடுவார் – நடிகை அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு!

- Advertisement -

தனது அக்கா நடிகை அம்பிகா என்னிடம் 46 கோடி ரூபாய் செக் மோசடி செய்ய முயன்றதாக அவரது தங்கை நடிகை ராதா போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், இதுகுறித்து நடிகை அம்பிகா விளக்கம் அளித்து இருக்கிறார். இன்று செயதியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா தனது தங்கை ராதா குறித்து பல புகார்களை கூறியிருக்கிறார்.

நடிகை ராதா குறித்து அம்பிகா கூறியதாவது, ஏ ஆர் எஸ் சொத்தில் 50 சென்ட் நிலம் பங்கு போடுவதில் மோசடி நடந்துள்ளது. ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் மூன்றில் ஒரு பங்குரிமை உள்ளது. நிலம் தங்கநகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவரின் புகார் உண்மைக்கு மாறானது.

- Advertisement -

ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விஷயத்தில் தான் பிரச்சனை. ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக இருந்தது நான்தான். இதை எம்ஜிஆர் கொடுத்தார் என்பது தவறான தகவல். இது என் உழைப்பில் உருவானது. ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் இருந்து என் பெயரை நீக்கிவிட்டனர். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? நான் என்ன செத்தா போய் விட்டேன்?

தங்கம் என்றாலே என் சகோதரி ராதாவுக்கு ரொம்பவும் பிரியம். ஒரு மாதிரி ஆகிவிடுவார். என் பெயரில் உள்ள தங்கத்தையும் அவர்தான் வைத்துள்ளார். சொத்து பிரச்னையை தீர்க்க செக் தந்தது ராதா தான். பின்னர் அதை நீக்கியதும் அவர்தான். செக் பவுன்ஸ் ஆனது பணம் போனது எனக்கு தான். நான்தான் வழக்கு போட்டு இருக்கணும். நான் உண்மையைச் சொன்னால் ராதா தான் சிறைக்குச் செல்ல நேரிடும். செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு என் வீட்டில் ஏன் அதை வைக்க வேண்டும்? இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்துவிட்டு போவாரா?

- Advertisement -

அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன். எல்லா வேலையும் இழுத்துப் போட்டு ஒரு வேலைக்காரி போல செய்து இருக்கிறேன். ஆனால் என் மீது மோசடி புகார் அளித்தது வேதனை அளிக்கிறது. தவறு செய்துவிட்டு முந்திக் கொள்வதைப் போல ராதா செயல்படுகிறார். குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என்று எண்ணினேன். ஆனால் ராதா அவ்வாறு செயல்படவில்லை.

எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆகையால் சமரசம் செய்ய பேச நினைத்தால் பேசுவோம். என்னுடைய இன்ஸ்டாகிராமில் படிக்காதவன் படத்தில் வரும் பணம் காசை கண்டுபுட்டா புலிகூட புல்லை தின்னும் என்ற பாடலை ராதாவுக்கு தான் இன்ஸ்டாகிராமில் வைத்தேன். நான் திருடியதாக சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நடிகை அம்பிகா கண்கலங்கி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்