- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷ்யம் பட நடிகைக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேர்ந்த கசப்பான அனுபவம், உண்மையில் நடந்தது என்ன? நடந்ததை...

திரிஷ்யம் பட நடிகைக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேர்ந்த கசப்பான அனுபவம், உண்மையில் நடந்தது என்ன? நடந்ததை போட்டுடைத்த அன்சிபா ஹாசன்!

- Advertisement -

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் 3 பாகங்களிலும் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த ஆண்டு நடந்த மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் அந்த பதவியை நடிகை அன்சிபா ஹாசன் ராஜினாமா செய்தார்.

நடிகர் சங்கத்தில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பரபரப்பாக சில குற்றச்சாட்டுகளையும் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அன்சிபா ஹாசன் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்துடன் கொச்சியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்று இருந்தோம்.

- Advertisement -

அப்போது அங்கு கார் பார்க்கிங் பகுதியில் எனது சகோதரருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம். அப்போது அந்த இன்னொரு நபருக்கு ஆதரவளிக்கும் விதமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த உள்ளூர் அரசியல்வாதி மற்றும் அவருடன் சிலரும் வந்திருந்தனர்.

அப்படி வந்தவர்களில் ஒருவர் அங்கிருந்த போலீஸ் எஸ்ஐ முன்னிலையில் எங்களது குடும்பத்தாரையும் எங்களையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்கள். பிறகு என் சகோதரரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள் போலீசார்.

- Advertisement -

அதன் பிறகு அந்த கடிதத்தின் கீழே நாங்கள் அன்சிபாவின் பிரபலத்தை பயன்படுத்தி அந்த நபரை மிரட்டினோம் என்றும் கூடுதலான வரிகளை எங்களுக்கு தெரியாமலேயே சேர்த்துக் கொண்டனர். ஆனால் அப்படி யாரும் அந்த விவகாரத்தில் நடந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு பெண்ணாக எனக்கு அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது போல உணர்ந்தேன். இதுகுறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளோம் என்று நடிகை அன்சிபா ஹாசன் கூறியிருக்கிறார். தனக்கே காவல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்று திரிஷ்யம் பட நடிகை அன்சிபா ஹாசன் குற்றம் சாட்டியிருப்பது தற்போது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்