தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் மற்றும் நடிகர் விசு. மிகச்சிறந்த ஒரு படைப்பாளியாக தனது ஜனரஞ்சகமாக படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். பேமிலி டிராமா கதைகளை மிக அழகாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர். யதார்த்தமான கதைக்களங்களில் உருவான அவரது படங்களை பார்க்க பார்க்க சலிக்காது.
சம்சாரம் அது மின்சாரம் திருமதி ஒரு வெகுமதி பெண்மணி அவள் கண்மணி வரவு நல்ல உறவு சகலகலா சம்மந்தி மணல் கயிறு டௌரி கல்யாணம் சிதம்பர ரகசியம் சிகாமணி ரமாமணி வேடிக்கை என் வாடிக்கை உரிமை ஊஞ்சலாடுகிறது பட்டுக்கோட்டை பெரியப்பா என விசுவின் பல படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.
விசு இயக்கிய பெரும்பாலான படங்கள் அவரது மேடை நாடகங்களாக தான் இருக்கின்றன. மேடையில் அரங்கேற்றம் செய்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்ற படங்களை தான் அவர் திரைப்படங்களாக தியேட்டர்களுக்கு கொண்டு வந்தார். அதில் அவர் பெரிய வெற்றியும் பெற்றார்.
திரைப்பட இயக்குனராக நடிகராக மட்டுமின்றி சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை இயக்குனர் விசு தொகுத்து வழங்கினார், சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட விஷயங்களை மையப்பொருளாக கொண்டு அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல பிரச்னைகள் மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இளம் நடிகர் கலையரசன் கூட சில வாரங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசி போது, சினிமாவில் சாதி பார்ப்பதால் பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது உண்மைதான் என்று வெளிப்படையாக கூறியது வைரலானது.
சமீபத்தில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் வீடியோ ஒன்றில் கூறியதாவது, சினிமாவில் சாதி பார்த்து தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் அவர்கள் சாதியினருக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். எனக்கு தெரிந்தவரை இயக்குனர் விசு முதுகை தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்துதான் வாய்ப்பு தருவார். இதனால் சினிமாவில் சாதி பாகுபாடு இருப்பது உண்மைதான் என்று பகிரங்கமாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். விசு அப்படிப்பட்டவரா என ரசிகர்கள் பலத்த ஆச்சரியத்தில் உள்ளனர்.





