- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவங்களை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போச்சு, வேற பெண்களை கூப்பிடுங்க, இயக்குநருக்கு ஆர்டர் போட்ட...

இவங்களை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போச்சு, வேற பெண்களை கூப்பிடுங்க, இயக்குநருக்கு ஆர்டர் போட்ட வடிவேலு – நடிகை ஆர்த்தி ஓபன் ஸ்டேட்மென்ட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர். 1990களில் துவங்கி 2010 வரை 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களில் ஒரு காமெடி சாம்ராஜ்ஜியமே நடத்தினார். ஒரு நாள் கால்ஷீட்டுக்கு துவக்கத்தில் ரூ. 5 லட்சம் துவங்கி, பிறகு ரூ. 12 லட்சம் வரை சம்பளமாக வாங்கியவர்.

ஆனால் தன்னுடன் காமெடியில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு தினசரி ரூ. 1500 தான் தரச் சொல்லுவார். தயாரிப்பாளர் அதிக சம்பளம் தர முன்வந்தாலும், வடிவேலுவே அதை தடுத்து, அவ்வளவு எல்லாம் கொடுக்காதீங்க, அப்புறம் அதுவே பழக்கமாகி விடும், என்று சொல்லி துணை நடிகர்களின் வயிற்றில் அடித்தவர்தான் வடிவேலு.

- Advertisement -

சினிமாவில் அவர் காமெடி செய்தாலும், நிஜ வாழ்வில் தன்னுடன் நடித்து, தனது காமெடி பயணத்தில் துணை நின்ற சக நடிகர்களுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்து, அவர்களை வளர விடாமல் தடுத்த வடிவேலு, பிறகு 10 ஆண்டுகள் வரை நடிக்கவே முடியாத அளவுக்கு வீட்டில் இருந்தார். குறிப்பாக விஜயகாந்த் குறித்து அவர் விமர்சித்தது எல்லாம், அவரது தரம் தாழ்ந்த குணத்தையே வெளிப்படுத்தியது.

சமீபத்தில் காமெடி நடிகை ஆர்த்தி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் வடிவேலுவை பொருத்த வரை, தன்னுடன் நடிப்பவர்கள் தன்னை விட சிறப்பாக நடித்து விட்டால் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் வளர விடாமல் தடுக்க என்ன வேலையோ, அதை தயங்காமல் செய்து விடுவார்.

- Advertisement -

ஒருமுறை அவருடன் ஒரு படத்தில் நான் நடித்தேன். அப்போது என்னை அழைத்து, நீ ரொம்ப நல்லா நடிக்கறேம்மா, என்னை விட சிறப்பா நடிக்கறே என பாராட்டினார். அடுத்த நாளே, என்னை அந்த படத்தில் இருந்து விலக்கி விட்டனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் என் கணவர் கணேஷை, டைரக்டர் சிம்பு தேவன் கமிட் செய்த நிலையில், வடிவேலு வேண்டாம் என நடிக்க விடாமல் செய்து விட்டார்.

நடிகர் வடிவேலு பாம்பு போன்ற குணம் கொண்டவர். மற்றவர்களை கொத்திக் கொண்டே இருப்பதுதான் அவரது வேலை. நானும், கோவை சரளாவும் 23ம் புலிகேசியில் நடிக்க இருந்தோம். சிம்புதேவன் அழைத்திருந்தார். ஆனால், அவங்க எல்லாம் பார்த்த மூஞ்சிகள். பலமுறை பார்த்து பார்த்து அலுத்து போச்சு. அதனால் வேண்டாம். வேற நடிகைகளை கமிட் பண்ணுங்க, என்று சொல்லி, எங்களை நடிக்க விடாமல் தடுத்தவர் என, வடிவேலு பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஆர்த்தி.

- Advertisement -

சற்று முன்