- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தில் இணைந்த மற்றும் ஒரு நாயகி - நடிகர் சிம்புவுக்கு இத்தனை ஜோடிகளா? தரமான...

அரசன் படத்தில் இணைந்த மற்றும் ஒரு நாயகி – நடிகர் சிம்புவுக்கு இத்தனை ஜோடிகளா? தரமான சம்பவத்துக்கு தயாரான இயக்குனர் வெற்றிமாறன்!

- Advertisement -

நடிகர் சிம்பு படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகாமல் பல மாதங்கள் இடைவெளியில் தான் வெளியாகின்றன. இந்த தாமதம் சிம்பு ரசிகர்களை விரக்தியடைய வைக்கிறது. தக்லைஃப் படத்துக்கு பிறகு சிம்பு நடித்த படம் ஒன்று கூட இதுவரை வெளியாகவில்லை.

இப்படி பல மாதங்கள் இடைவெளி விடுவதால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தங்களது கனவு நாயகன் படங்கள் வெளியாகும் போது கொண்டாடுகின்றனர். ஆனால் சிம்பு ரசிகர்கள் மட்டும் பலத்த ஏமாற்றமடைகின்றனர். இதற்கிடையே சிலம்பாட்டம் படம் கடந்த மாதம் வெளியானது. ஆனால் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் படம் அரசன். கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் 2 வாரங்கள் தொடர்ந்து நடந்தது. இதில் நடிகர் சிம்பு கலந்துக்கொண்டு பல காட்சிகளில் நடித்து கொடுத்தார்.

அதன்பிறகு இப்போது 2வது ஷெட்யூல் ஷூட்டிங் மீண்டும் கோவில்பட்டியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2வது வாரத்தில் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்குகிறது. ஏற்கனவே அரசன் படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமி ஆகியோர் கமிட் ஆகி நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான மை லார்ட் என்ற படத்தில் நாயகியாக நடித்த சைத்ராவும் அரசன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதன்மூலம் அரசன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்ற தகவல் உறுதியாகி விட்டது. இது சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

வழக்கமாக வெற்றிமாறன் படங்களில் ஆக்சன்தான் பிரதானமாக இருக்கும் என்றாலும் பொல்லாதவன் ஆடுகளம் விடுதலை விடுதலை 2 போன்ற படங்களில் காதல் பின்னணியிலும் கதையை கொண்டு சென்று ரசிகர்களை கவர்ந்தார். அதனால் அரசன் படத்திலும் 3 நாயகிகள் இருப்பதால் இதிலும் காதல் பின்னணியில் கதைக்களத்தில் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்