- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி நினைத்துதான் ராஜகுமாரனை நான் காதலித்தேன் - பல ஆண்டுகளுக்கு பின் ரகசியத்தை வெளிப்படுத்திய நடிகை...

அப்படி நினைத்துதான் ராஜகுமாரனை நான் காதலித்தேன் – பல ஆண்டுகளுக்கு பின் ரகசியத்தை வெளிப்படுத்திய நடிகை தேவயானி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் பல நடிகைகள் பெரிய பெரிய தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். சில நேரங்களில் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களை கூட காதலித்து திருமணம் செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில் பல நட்சத்திர தம்பதிகளை சொல்ல முடியும்.

குறிப்பாக ராமராஜன் நளினி சீதா பார்த்திபன் கமல் சரிகா அஜீத்குமார் ஷாலினி இப்படி பலரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அந்த வகையில் கடந்த 1990களில் மிக பிரபலமாக இருந்த நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவரது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர் ராஜகுமாரனை கரம் பிடித்தார்.

- Advertisement -

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன், நீ வருவாய் என ஒரு படம்தான் வெற்றிப்படமாக கொடுத்திருந்தார். அவரது 2வது படம் விண்ணுக்கும் மண்ணுக்கும் படுதோல்வி அடைந்தது. அந்த சூழலில்தான் தேவயானி அவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி ராஜகுமாரன் – தேவயானி ஜோடிப்பொருத்தம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அழகிலும் தோற்றத்திலும் மிளிர்ந்த தேவயானி சாதாரணமாக தோற்றமளித்த ராஜகுமாரனை காதலித்து மணம் செய்தது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அழகான மனங்கள் அன்பில் ஒத்துப்போனால் உருவங்கள் அதற்கு தடையில்லை என்பதை அந்த நட்சத்திர தம்பதி இதுவரை அன்பாக ஒற்றுமையாக வாழ்ந்து காட்டி நிரூபித்து இருக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தேவயானி தனது திருமணம் குறித்து தேவயானி கூறியதாவது, நான் நடித்த சூரியவம்சம் படத்தில் என் கணவர் ராஜகுமாரன் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார். அதற்குப் பிறகு ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புறம்தான் அவரோட டைரக்சனில் நான், நீ வருவாய் படத்தில் நடித்தேன். அவர் கூட 2வது படம் பண்ணும் போதுதான் அவரோட கேரக்டர் அவரோட நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்கு பிடித்தது.

எப்பவுமே என்னை அவர் ரொம்ப ஊக்கப்படுத்துவார். எனக்கு நடிப்புன்னா ரொம்பவும் பிடிக்கும். அதனால் என்னை சரியாக வழிநடத்துற ஒரு நபர் வேண்டும் என்று நினைத்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன். எங்க அம்மாவுக்கும் அவரை பிடித்திருந்தது. அதனால் இவர்தான் என் வாழ்க்கைக்கு சரியான நபர் என்று முடிவு செய்தேன். அதனால்தான் நான் ராஜகுமாரனை திருமணம் செய்துக்கொண்டேன் என்று நடிகை தேவயானி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்