- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களுக்கு அது நடந்துவிட்டால் எல்லாமே முடிந்து விட்டதா? நாங்கள் மீண்டும் நாயகியாக நடிக்கவே கூடாதா? -...

எங்களுக்கு அது நடந்துவிட்டால் எல்லாமே முடிந்து விட்டதா? நாங்கள் மீண்டும் நாயகியாக நடிக்கவே கூடாதா? – நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு இந்தி என தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். துப்பாக்கி ஜில்லா விவேகம் பழனி ஆல் இன் ஆல் அழகுராஜா நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.

சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக அவர் நடிக்க தொடங்கி விட்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

பொதுவாக நடிகைகள் திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்க வருவது இல்லை. அப்படியே சில ஆண்டுகள் கழித்து வந்தாலும் அவர்கள் அக்கா அம்மா அண்ணி சித்தி கேரக்டர்களில் நடிக்கின்றனர். உடல் தோற்றம் மாறிய நடிகைகள் டிவி சீரியல், வெப் சீரிஸ்களில் நடிக்க போய்விடுகின்றனர். இதற்கு நடிகை திருமணமானவர் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் நேர்காணலில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, பொதுவாக சினிமா மீது எனக்கு ஒரு சிறிய அதிருப்தி உண்டு. நடிகர்களை காட்டிலும் நடிகைகளே அதிக சவால்களை இங்கு எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக நடிகைகளுக்கு திருமணமாகி விட்டாலே அவர்கள் அவ்வளவுதான் என்று கருதி ஒதுக்கப்படுகிறார்கள்.

- Advertisement -

சினிமாவில் எப்படிப்பட்ட உயரத்தில் மார்க்கெட் இருந்தாலும் திருமணமாகி விட்டாலே அவர்களை ஓரங்கட்ட பார்க்கிறார்கள். முடக்க பார்க்கிறார்கள். அந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். இங்கு திறமையை எந்த அணை போட்டும் தடுத்து நிறுத்த முடியாது.

திறமையான நடிகர்கள் எந்த வயதிலும் நடிக்கலாம். அதற்கு பலரையும் உதாரணமாக சொல்ல முடியும் என்று அந்த நேர்காணலில் நடிகை காஜல் அகர்வால் ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும் இந்தி சினிமாவை காட்டிலும் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கதைகளில் தரப்படுகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்