தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். இன்று அவரது உடல் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கே பாக்யராஜ் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வர முடியாத பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
அதில் கே பாக்யராஜ் உடன் பழகிய நாட்களையும் ஒன்றாக பணிசெய்த அனுபவங்களையும் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தான் கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திதா திருமணத்தில் கலந்துக்கொண்டு கே பாக்யராஜ் சென்னை திரும்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஓரிரு நாட்களிலேயே இப்படி ஒரு சோகம் ஏற்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை குஷ்பு அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலமாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது அழகான நினைவுகளை குறிப்பிட்டு உருக்கமான பதிவை ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது மகள் அவந்திதா திருமண விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இயக்குனர் பாக்யராஜ் திடீர் மறைவால் தமிழகமே துக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆடம்பரமான சந்தோசமான புகைப்படங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த நடிகை குஷ்பு, எனது மகனின் திருமணம் நடந்து 48 மணி நேரம் கூட ஆகவில்லை. எனக்கு மகிழ்ச்சியாக இருக்க முழு உரிமை உண்டு. பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவை உங்களுக்கு தெரியுமா? இல்லை எனக்கு தெரியுமா? உங்களுக்கு என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விடுங்கள்.
உங்களைப் போன்றவர்கள் இல்லாமலேயே நான் சிறப்பாக இருப்பேன் என்று அதற்கு பதில் சொல்லியிருக்கிறார். இயக்குனர் கே பாக்யராஜின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வு தான் என்றாலும் குஷ்புவின் வீட்டில் நடந்துள்ள திருமண நிகழ்வு அவர்களை பொறுத்த வரை சந்தோசமான நிகழ்வு என்பதால் அவர்களுக்கு அதை கொண்டாட முழு உரிமை உண்டு என்று சிலர் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.





