மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்து வெற்றிக் கொடி பறக்கவிட்ட பல நடிகைகள் இருக்கின்றனர். ராதா அம்பிகா ரேவதி நதியா என்ற அந்த பட்டியலில் சமீபத்தில் கேரளாவில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் நித்யா மேனன் மமிதா பைஜூ உள்ளிட்டோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதில் பிரேமலு படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை மமிதா பைஜூ தமிழில் பல படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் இடத்தில் மமிதா பைஜூ முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். விஜய்க்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் நடித்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
மேலும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் டியூட் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். கோமாளி படத்தில் இயக்குனராக ஜெயித்த பிரதீப் ரங்கநான் அடுத்து நாயகனாக நடித்து இயக்கிய படம் லவ்டுடே. அந்த படம் மாஸ் ஹிட் ஆன நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்த டிராகன் படமும் மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் என்ற படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளா். மேலும் நடிகர் சூர்யாவுடன் ஒரு படத்திலும் மமிதா பைஜூ பிஸியாக நடித்துக் வருகிறார். இப்படி முன்னணி நாயகர்களுடன் தமிழில் மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் முதலில் நாயகியாக நடித்து பின் விலகியவர்தான் மமிதா பைஜூ.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மமீதா பைஜூ கூறியதாவது, நான் டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். அப்போது கூட டாக்டர் கனவு இருந்தது. ஆனால் 7 படங்களில் நடித்த பின் அந்த கனவை நான் கைவிட்டு விட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் எனக்கு அவர் ஆதரவு கொடுத்தார்.
அதற்கு காரணம் என்னுடைய அப்பாவும் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் கடைசியில் டாக்டராகி விட்டார். அவர் நன்றாக படிப்பார். அப்பாவின் கனவு என்னுடைய ஆசை இரண்டுமே நிறைவேறவில்லை என்று மமிதா பைஜூ ஆதங்கமாக கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் பிஎஸ்சி சைக்காலஜி படிக்க துவங்கிய மமிதா பைஜூ பாதியில் அந்த படிப்பை கைவிட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





