நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த வாரத்தில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணியில் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். இதற்கு முன் வெளியான ஜெயிலர், மிகப்பெரிய வெற்றியை ரஜினிக்கு கொடுத்தது. ஒரு பெரிய மாஸ் கொடுத்த படமாகவும் ஜெயிலர் அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து வெளியாகும் வேட்டையன் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் குரலில் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது. கடைசியாக மலேசியா வாசுதேவன், அருணாச்சலம் படத்தில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடலை அவர் பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்கனவே தனுஷூடன் அசுரன், நடிகர் அஜித்குமாருடன் துணிவு ஆகிய படங்களில் நடித்திருந்தார். விடுதலை 2 வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தற்போது மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மிஸ்டர் எக்ஸ் என்ற படத்திலும் மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். தற்போது வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மஞ்சு வாரியார் கூறுகையில், இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டர் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த கேரக்டரில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் நிறைய உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதனால் வேட்டையன் படத்தில் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடித்திருக்கிறேன் என்று மஞ்சு வாரியார் கூறியிருக்கிறார். சமீபத்தில் ரஜினி மஞ்சுவாரியார் ஆடிப் பாடிய மனசிலாயோ என்ற பாடல் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. குறிப்பாக அதில் மஞ்சுவாரியாரின் நடனம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





