சினிமாவில் இது ரீ என்ட்ரி காலம் என்று கூட சொல்லலாம். 1990களில் முன்னணி நாயகிகளாக வலம் வந்த பல நடிகைகள் இப்போது சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துவிடுகின்றனர். பிஸியாக இருந்த அவர், திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகைகள் கௌதமி லைலா நதியா சரிதா மீனா ரோஜா போன்றவர்களை தொடர்ந்து இப்போது களத்துக்கு வந்திருப்பவர் நடிகை மோனிகா. கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை மோகினி. இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்திக் சரத்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக மோகினி நடித்தார். நாடோடி பாட்டுக்காரன் நான் பேச நினைப்பதெல்லாம் சின்ன மருமகள் வனஜா கிரிஜா புதிய மன்னர்கள் என பல படங்களில் மோகினி அப்போது நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் நடிப்பது குறைந்து போனது. குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு முன்பாகவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் நடிகை மோகினி செட்டில் ஆனார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பெயரளவுக்கு சில படங்களில் மோகினி நடித்தாலும் 2011ம் ஆண்டில் நடிகர் சுரேஷ்கோபி நடித்த கலெக்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கலெக்டர் படத்தை தொடர்ந்து மோகினி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் கலிபா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மோகினி நடிக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார்.
நடிகர் மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தின் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் கலீபா படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரீ என்ட்ரி ஆவதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் நடிகை மோகினி. இந்த படத்தில் இவர் நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் அவர்நடிக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதில் கதாபாத்திரத்தில் மோகினி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.





