விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்துக்கொண்டார். சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் ஹோம் டூர் நிகழ்ச்சிக்காக தனது வீட்டை ரக்சிதா சுற்றிக் காட்டி இருக்கிறார்.
அப்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையையும் காட்டிய அவர் ஒரு ரூமுக்குள் சென்றபோது மிகவும் குஷியாகி விட்டார். காரணம் அங்கு வெளிநாட்டு மதுபான வகைகள் அந்த கபோர்டு முழுக்க வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு காட்சியளித்தன. அதுகுறித்து பேசிய ரக்சிதா, இதற்குள் இருப்பது மருந்து. இது அப்பப்போ நம்முடைய வாழ்க்கைக்கு தேவைப்படும் என்பதால் இதனை டானிக் ரூம் என்று தான் அழைப்பேன் என்கிறார்.
தனது வீட்டுக்குள் ஒரு மினி பார் செட்டப் செய்து ரக்சிதா வைத்திருக்கிறார். இந்த மினி பார் வீட்டுக்குள் வைத்தது குறித்து ரக்சிதா கூறுகையில், என்னுடைய தந்தை ஒரு மது பிரியர். அவர் வீடு கட்டினால் அங்கு சரக்குகளை வைக்க தனி இடம் வேண்டும் என்று சொல்வார். அவர் மறைந்து விட்டதால் அவரது நினைவாக இந்த மினி பார் திட்டத்தை வீட்டில் வைத்திருக்கிறேன் என்று ரக்சிதா கூறினார்.
அந்த கபோர்டில் விதவிதமான பிராண்டட் ஒயின்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார் ரக்சிதா. அதில் பெரும்பாலானவை வெளிநாட்டு சரக்குகள் தான். பின்னர் ஒரு சிகப்பு கலர் மூடியுடன் இருந்த ஒயின் பாட்டிலை எடுத்துக்காட்டிய ரக்சிதா, இது தனக்கு மிகவும் பிடித்த பிராண்ட் என்றும் கூறினார். இந்த ஒயினை குடித்தால் முகம் பளபள என்று ஆகிவிடும். ஆனால் ரெகுலராக குடித்தால் பாடி வெயிட் போட்டு விடும் என்றும் கூறுகிறார்.
ஆனால் வாரத்திற்கு ஒருமுறை குடிக்கலாம். அதுவும் பாட்டில் ஃபுல்லா குடிக்க கூடாது. இரண்டு அல்லது மூன்று கிளாஸ் குடிக்கலாம் எனவும் ரக்சிதா அட்வைஸ் தருகிறார். பின்னர் ஒரு கிரீன் கலர் பாட்டிலை எடுத்துக் காட்டிய ரக்சிதா, இது மலேசியாவில் இருந்து எடுத்து வந்தது. இதன் பெயர் சோஜூ. அண்மையில் அங்கு சென்றபோது வாங்கி வந்தேன் என்கிறார்.
அவர் வாங்கியதில் அதிக விலை கொண்ட சரக்கை எடுத்துக்காட்டிய ரக்சிதா, இதன் விலை 25 ஆயிரம் ரூபாய் இருக்கும். இந்த சரக்கை அமெரிக்கா சென்றிருந்த போது வாங்கியதாகவும் கூறினார். இதையெல்லாம் என்னுடைய அண்ணன் தான் யூஸ் பண்ணுவான் என்றும் கடைசியாக ரக்சிதா கூறினார். குடும்ப பாங்கான நடிகை என மக்களிடம் பெயர் பெற்ற நடிகை ரக்சிதா மகாலட்சுமி வீட்டில் மினிபார் இருந்ததை கண்டு ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





