தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடையழகி என்ற செல்லப்பெயரும் உண்டு. முன்னணி நாயகர்களுக்கு ரம்பா ஜோடியாக நடித்தவர். பல வெற்றிப் படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையும் ரம்பாவுக்கு உண்டு.
குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், உனக்காக எல்லாம் உனக்காக, ஜானகிராமன் போன்ற சுந்தர் சி இயக்கிய படங்களில் ரம்பா முக்கிய நாயகியாக நடித்திருந்தார். காதலா காதலா, விஐபி, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன், ராசி, குங்கும பொட்டுக் கவுண்டர், உழவன், செங்கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரம்பா.
ரம்பா அழகான நடிகை மட்டுமின்றி, நடனத் திறமை மிக்கவர். பல படங்களில் அவரது நடனத்தை பார்த்து, ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். ஆனால் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு கனடாவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
எனினும் பல ஆண்டுகளாக அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் நடிக்க விரும்பவில்லை. குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்புவதாக அவர் கூறி மறுத்துவிட்டார். ஆனால் சமீப காலமாக அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழ் சினிமாவில் நடிக்க ரம்பா சில கண்டிசன்களை வைத்திருக்கிறார். அதாவது படத்தில் ஏதேனும் சில காட்சிகள் வரும் கெஸ்ட் ரோல், கேமியோ ரோலில் நிச்சயமாக நடிக்க மாட்டேன். படத்தில் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. ஆனால் படத்தில் எனது கேரக்டர் வலுவானதாக இருக்க வேண்டும். அதாவது படத்தில் எனது கேரக்டர் குறித்து, படம் பார்க்கும் ரசிகர்கள் பேச வேண்டும்.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்க மட்டுமே எனக்கு பிடிக்கும், அப்படி நல்ல கேரக்டர், நல்ல ரோல் என்றால் மட்டுமே நடிக்க சம்மதிப்பேன் என்று கூறியிருக்கிறார். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் இன்னும் கதாநாயகியாக இருக்கும் போது, ரம்பா போடும் கண்டிஷன்கள் ஒன்றும் தவறில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், தயாரிப்பாளர்கள் தான் யோசிக்கின்றனர்.





