கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் தனது உடல் மொழியாலும் கிராமத்து மண்வாசனை மொழியாலும் வெகு சீக்கிரமாகவே ரசிகர்களிடம் சென்று சேர்ந்து விட்டார். அதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்தார்.
அவர் பீக்கில் இருந்தபோது அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் இருந்தது. ரஜினியேகூட சந்திரமுகி கதையை தன்னிடம் பி.வாசு கூறும்போது முதலில் வடிவேல் கால்ஷீட்டை வாங்கி விடுங்கள் என்று கூறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் அசுரத்தனமாக நடித்துக் கொண்டிருந்தார் வடிவேலு. அப்படிப்பட்ட சமயத்தில் அரசியல் மேடை ஏறியதால் அவர் கரியர் உடனடியாக குறைந்தது. அவரை வைத்து படம் எடுத்தால் பிரச்சனை ஏற்படுமோ என்று பயந்து தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
இந்தச் சூழலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் வடிவேலு. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் நடித்தார் வடிவேலு. படம் மெகா ஹிட் ஆகியிருக்கிறது. இதற்கு இடையே வடிவேல் உடன் பணியாற்றியவர்கள் அவரைப்பற்றி சமீபகாலமாக அதிக அளவிலான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர் அந்த வகையில் நடிகை பிரேம பிரியா வடிவேலு குறித்து சமீபத்தில் எடுத்த பேட்டி ஒன்றில் பல புகார் பல குற்றச்சாட்டுகளை கூறினார்
இந்நிலையில் பிரேம பிரியாவை கண்டித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர, “நடிகை பிரேம பிரியா நல்ல நடிகை என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஆனால் எனது வாழ்க்கையை வடிவேலுதான் கெடுத்துவிட்டார் என்று சொல்வது ரொம்பவே தவறு. தவறு மட்டுமல்ல அது ஒரு நன்றி கெட்ட செயலும்கூட. வடிவேலுவுடன் நடித்ததால்தான் அவர் பிரபலமடைந்தார்.
இன்றுவரை அவர் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடிப்பதற்கு காரணம் வடிவேலுவுடன் நடித்து பிரபலமானதால்தான். நிலைமை இப்படி இருக்க வடிவேலு மீது ஏன் பொய் குற்றச்சாட்டுக்களை அவர் முன் வைக்கிறார்.அவதூறுகளை பரப்பிவருகிறார். இதுபோன்று பெரிய நடிகர்கள் மீது புகார்களை கூறிக்கொண்டிருந்தால் சில நாட்களுக்கு விளம்பரம் கிடைக்கலாம். ஆனால் நடிப்பதற்கு வாய்ப்பு தர இயக்குநர்கள் தயங்குவார்கள். நடிகைகளின் பெயர்தான் கெட்டுப்போகும். சில நாட்களுக்கு முன்புகூட கவுண்டமணியுடன் நடித்து பிரபலமடைந்த ஷர்மிலிகூட இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்” என்றார்.





