தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடிகை ரோஜா அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் முரளி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதன் பிறகு இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜா ஆந்திராவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் அரசியல் ஆர்வம் காரணமாக ஆந்திரா அரசியலில் ரோஜா குதித்தார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திரா சட்டசபையில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ரோஜா வகித்துள்ளார்.
இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இப்போது இயக்குனர் பரிதி இளவழகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அன்பே டயானா என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிகை ரோஜா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் எப்போதுமே சினிமாவை விட்டு போனதாக நினைக்கவில்லை. இருந்தாலும் மீண்டும் நடிக்க வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்ய கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறார் என்று நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.
தீவிர அரசியலில் இருக்கும்போதும் எனக்கு புத்துணர்ச்சி தருவது சினிமா தான். இந்த முறை அழுத்தமாக வந்திருக்கிறேன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க போகிறேன். சினிமா பிரபலங்கள் மீது எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு ஒரு பொறாமை இருக்கும். பிரச்சாரத்துக்கு பாசத்துடன் அழைப்பார்கள். ஆனால் தேர்தலில் குதித்து விட்டால் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க பார்ப்பார்கள். அந்த வகையில் நிறைய போட்டி பொறாமைகள் சதிகளை நான் என் அரசியல் பயணத்தில் பார்த்துள்ளேன்.
ஏன் தமிழகத்திலேயே விஜய்க்கு அதுதான் நடக்கிறது. இப்போது அவர் முதலமைச்சராகி விட்டதால் அது சரியில்லை இது சரியில்லை என்று பேசத் தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் என்டிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார்கள். அரசியல் பழகி மக்களுக்கு நல்லது செய்தார்கள். அந்த வகையில் சொன்னதை செய்தால் விஜய்க்கு நல்ல எதிர்காலம் உண்டு. அரசியலில் இளைஞர்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும் என்று நடிகை ரோஜா கூ கூறியிருக்கிறார்.





