- Advertisement -
Homeபொழுதுபோக்குகதாநாயகிகள் சண்டை போட்டுக்குவோமா? ரம்யா கிருஷ்ணன்தான் அதை எனக்கு கத்துக்கொடுத்தார் - மேடையில் உண்மையை போட்டுடைத்த...

கதாநாயகிகள் சண்டை போட்டுக்குவோமா? ரம்யா கிருஷ்ணன்தான் அதை எனக்கு கத்துக்கொடுத்தார் – மேடையில் உண்மையை போட்டுடைத்த நடிகை ரோஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த அவரை செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. பிறகு ரோஜா பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பிறகு இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

உழைப்பாளி வீரா தமிழ்செல்வன் மக்கள் ஆட்சி ஆயுதபூஜை பரம்பரை ராசய்யா சூரியன் ஏழையின் சிரிப்பில் சுயம்வரம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரோஜா. பிறகு ஒரு கட்டத்தில் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ரோஜா இருந்தார்.

நடிகை ரோஜாவை பொருத்த வரை அரசியல் சினிமா என இரண்டிலுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் குறிப்பிட்ட நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். ஆனால் சமீபமாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சென்னையில் நடக்கும் சினிமா சார்ந்த விழாக்களில், சினிமா நிகழ்ச்சிகளில் ரோஜா தவறாமல் பங்கேற்கிறார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரம்யா கிருஷ்ணன் ரோஜா தேவயானி ரம்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுடன் மேடையில் நின்றுக்கொண்டு நடிகை ரோஜா கூறியதாவது, கதாநாயகிகள் என்றாலே ஆகாது, பொறாமையால் ரொம்ப சண்டை போட்டுக்குவாங்க என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகின்றனர். இங்கே எங்களை பார்த்தால் அப்படி தோணுதா? நாங்க எல்லாம் ரொம்ப பிரண்ட்லியா இருப்போம்.

நாங்க ஷோ போகும்போது கூட மேக்கப் செய்வது எல்லாம் ரம்யா கிருஷ்ணன் எங்களுக்கு கத்துக் கொடுத்துட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு அவங்களே மேக்கப் பண்ணிக்குவாங்க.மேக்கப் பண்ண எனக்குத் தெரியாது. அவங்கதான் எனக்கு கத்துக் கொடுத்தது. இவங்களை எல்லாம் இன்னிக்கு ஒண்ணா சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குது.

ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் நடித்த படையப்பா, அப்புறம் பாகுபலி படங்களை பார்த்தால் அந்த 2 கேரக்டர்களை வேற யாராலும் பண்ண முடியாது. அந்த படங்களை மறுபடி பார்த்தால் புல்லரித்து விடும். நாங்களே சொல்றோம். ஒன் அண்ட் ஒன்லி ரம்யாகிருஷ்ணனால் மட்டும்தான் பண்ண முடியும். ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க, எக்ஸ்ட்ரானரியா பண்ணியிருக்காங்க என்று நடிகை ரோஜா பாராட்டி பேசியிருக்கிறார்.

சற்று முன்