தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி என்ற படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நாயகியாக ரோஜா அறிமுகமானார். கருப்பாக இருந்தாலும் களையாக இருந்த அவரது முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் அர்ஜூன் பிரபு கார்த்திக் பிரபுதேவா என முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தார். குறிப்பாக ராசய்யா உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஏழையின் சிரிப்பில் வீரா உழைப்பாளி தமிழ் செல்வன் ஆயுதபூஜை என பல படங்களில் ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்கிடையே இயக்குனர் ஆர்கே செல்வமணியை நடிகை ரோஜா காதல் திருமணம் செய்துக்கொண்டார். பிறகு ஆந்திராவில் அரசியல் களத்தில் குதித்த நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் போது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ரோஜா கூறியதாவது, நான்தான் அடிக்கடி அவர் கூட சண்டை போடுவேன். செல்வமணி என்கிட்ட சண்டை போட மாட்டார். அவருக்கு கோபம் வந்தால் சீரியஸாக ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்குவார். கோபம் குறைஞ்ச பின்னால தான் ரூமை விட்டு வெளியே வருவார்.
ஏன்னா அவர் திட்டுனா நான் அழுவேன். அப்புறம் அவர்தான் என்னை கன்வின்ஸ் பண்ணனும். இதெல்லாம் எதுக்கு என்று அவர் என்னை திட்ட மாட்டார். அதனால் அவர் பேசாமல் ரூமுக்குள் போயிடுவார். பொண்டாட்டியை ஜெயிக்கணும் என்று நினைத்தால் நீ வாழ்க்கையில் தோத்துப் போயிடுவே என்று என் கணவரே ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசியிருக்கிறார். இதற்கு ரஜினியே எழுந்து நின்று கைதட்டினார்.
வாழ்க்கையில் ஜெயிக்கணும் என்று நினைத்தால் பொண்டாட்டிகிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டால் வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும். வெளியில் போய் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது. சரிம்மா சாரிம்மா என்று சொல்லிவிட்டால் குடும்பத்தில் பிரச்னையே இருக்காது என்று நடிகை ரோஜா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





