- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் பற்றி கிசுகிசுக்கள் மற்றும் புகார்கள், வெளிப்படையாக ஸ்டேட்மென்ட் தந்த நடிகை துஷாரா விஜயன்...

நடிகர் தனுஷ் பற்றி கிசுகிசுக்கள் மற்றும் புகார்கள், வெளிப்படையாக ஸ்டேட்மென்ட் தந்த நடிகை துஷாரா விஜயன் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் ரேவதி நடித்த ப பாண்டி படம் வெளியாகி, பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ப பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை என்ற படத்தை நடிகர் தனுஷ் இயக்கி வருகிறார். இது அவரது இயக்கத்தில் வெளியாகும் 4வது படமாகவும், அவர் நடிக்கும் 52 படமாகவும் உள்ளது. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும், நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வ ராகவனின் தம்பி என்பது மட்டுமின்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டில் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி சென்னையில் உள்ள முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் இந்த மாதத்தில் 7ம் தேதி மற்றும் 19ம் தேதி என 2 முறை, இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற நவம்பர் 2ம் தேதிக்கு இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பொதுவாக நடிகர் தனுஷ் குறித்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக இவர் தன்னுடன் நடித்த அமலா பால், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் நெருங்கிய நட்பில் இருப்பதாகவும், அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவி வருகிறது. அதே போல் தயாரிப்பாளர்களுடன் அடிக்கடி முரண்பட்டு செயல்படுவதாகவும் தனுஷ் மீது புகார்கள் உள்ளன. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தனுஷ் மீது ரெட்கார்டு போடப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் ராயன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் துஷாரா விஜயன். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்திலும் ஆசிரியை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது நேர்காணல் ஒன்றில் பேசிய துஷாரா விஜயன், சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் தனுஷ் மீது தவறான கிசுகிசுக்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர். நடிப்பின் மீது அவர் அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்