- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிப்பில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை ஷகிலா. கடந்த 1990களில் இவர் நடித்த தமிழ் மலையாள கவர்ச்சி படங்கள் வசூலில் சக்கைப் போடு போட்டன. இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஷகிலா கூறியதாவது, ஆரம்பகாலத்தில் சினிமாவில் நிறைய வெற்றிகளை பார்த்தேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது நல்ல அனுபவம். நடிகைகள் நயன்தாரா தமன்னா அளவுக்கு எனக்கு ரசிகர்கள் ஆதரவு தந்தனர். என்னுடைய நடிப்புத் திறமைதான் கேரளாவில் மலையாள சினிமாவில் நாவ் 20 ஆண்டுகள் நீடிக்க காரணம் என்று நடிகை ஷகிலா கூறியிருக்கிறார்.





