- Advertisement -
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் பெருகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டசபை திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்கு போய் டிராக்டர் ஓட்டி டீ குடித்து முருங்கைக்காய் பறித்த முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக் கூட்டத்தையாவது நடத்துவாரா? அதற்கு அவருக்கு நேரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.





