- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்கூட பழகுனவங்க கிட்ட அந்த பொய்யை தயங்காம சொல்லி இருக்கேன் - ஓபனாக பேசிய கமல்...

என்கூட பழகுனவங்க கிட்ட அந்த பொய்யை தயங்காம சொல்லி இருக்கேன் – ஓபனாக பேசிய கமல் மகள் நடிகை ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தனுஷ் உடன் 3 நடிகர் விஷாலுடன் பூஜை நடிகர் விஜயுடன் புலி நடிகர் அஜீத்குமாருடன் வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் ஸ்ருதிஹாசன் தமிழில் நடித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

- Advertisement -

தெலுங்கில் நிறைய படங்களில் இப்போது ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். பொதுவாக தெலுங்கு சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டினால், முத்தக்காட்சி படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடிக்கும் நாயகிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஸ்ருதிஹாசனுக்கும் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்திலும், விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படத்திலும், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள டிரெயின் என்ற படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தனது படங்கள் குறித்த புதிய தகவல்களை ஸ்ருதிஹாசன் அப்டேட் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் மிகப்பெரிய திரையுலக பிரபலத்தின் வாரிசு என்பதால் பொதுவெளியில் என்னைப் பற்றி தெரிந்தால் நான் சுதந்திரமாக வலம் வருவதற்கு அது சிரமமாக இருந்தது. அதனால் நான் படங்களின் நடிக்க வருவதற்கு முன்பாக எனக்கென ஒரு பொய்யான பெயரை வைத்துக்கொண்டு அந்தப் பெயரில்தான் வெளியே சுற்றினேன்.

மேலும் நான் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்று அறிமுகப்படுத்தி விட்டு யாரிடமாவது பேச ஆரம்பித்தால் அவர்களின் பேச்சு முழுவதும் தனது பெற்றோரின் பிரபலத்தைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அதனால் தன்னைப் பற்றி தெரியாத யாரிடமாவது பேச நேரும்போது, இந்த பொய்யான பெயரை கூறி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய வழக்கம். அதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி தான் விரும்பியபடி பேச முடிந்தது என்றும் அதில் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கிய பின்பு தான் இந்த பொய்யான பெயர் எடுபடவில்லை என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்