தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் நடிகை சோனா. நடிகர் வடிவேலுவுடன் குசேலன் அழகர்மலை நடிகர் விவேக்குடன் குரு என் ஆளு மற்றும் மிருகம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். கனிமொழி என்ற படத்தை அவரே சொந்தமாகவும் தயாரித்திருக்கிறார்.
சமீபத்தில் தனது வாழ்க்கை வரலாறை ஸ்மோக் என்ற பெயரில் வெப் சீரிஸ் தொடராக நடிகை சோனா தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். இப்போது அந்த வெப் சீரிஸ் ஹார்டு டிஸ்க்கை சிலர் பறித்து வைத்துக்கொண்டு தர மறுப்பதாக பெப்ஸி அலுவலகத்தில் நடிகை சோனா 2 தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல படங்களில் நடிகை சோனா நடித்த நிலையில், சில நடிகர்கள் தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்ததாகவும் பகிரங்கமாக புகார் கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் பேசிய அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு நான் வந்தாலும் கூட நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சோனா கூறியதாவது, குசேலன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் ரஜினிகாந்திடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய குடும்பத்தை பற்றி நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஒரு முறை ஏர்போர்ட்டில் அவரை நான் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடம் நான் குசேலன் படப்பிடிப்பில் எந்த இடத்தில் விட்டேனோ அதே விஷயத்தை அப்படியே தொடர்ந்து என்னிடம் கேட்டார். உங்க அம்மா இப்ப எப்படி இருக்கிறாங்க என்று அவர் கேட்டார். குசேலன் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது அம்மாவுக்கு சுகர் பாதிப்பு காரணமாக அவரது கால் விரல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டது.
அவரைப் பற்றி அப்போது நான் சொன்னதை 8 ஆண்டுகள் கழித்தும் ரஜினி மறக்காமல் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகுதான் எனக்கே தெரிந்தது. அவர் என்னிடம் மட்டுமல்ல, அவரிடம் பேசும் எல்லாரிடமும் இப்படித்தான் இருப்பார் என்று. எந்த விஷயம் குறித்து அவரிடம் பேசினாலும் அதை அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார் என்று அந்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை சோனா பேசியிருக்கிறார்.





