இந்திய சினிமாவில் ஒரு முன்னணி நாயகியாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை தமன்னா. தமிழ் படங்களில் அவர் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கல்லூரி வியாபாரி நான் மகான் அல்ல சுறா வீரம் அயன் வேங்கை அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் தமன்னா நடித்திருக்கிறார்.
குறிப்பாக ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆக்ஷன் நாயகியாக சண்டை காட்சிகளில் அருமையாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் அவருக்கு பாராட்டை பெற்று தந்தது. இதற்கிடையே தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து பெரிய அளவில் தமன்னா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சிறப்பு நடனங்களிலும் தமன்னா அதிக வரவேற்பு பெற்றவர். ஐயிட்டம் சாங் எனப்படும் குத்தாட்ட பாடல்களில் சிறப்பு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் அவர் காவாலய்யா என்ற குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
இப்போது தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்தியில் 5 புதிய படங்களில் அவர் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக புதிய நகை ஒன்றையும் நடிகை தமன்னா துவங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தமன்னா கூறியதாவது, சவால்கள் நிறைந்த முக்கிய கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்புகிறேன். அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க தான் எனக்கு அதிக ஆர்வமாக உள்ளது. ஆனால் என்னை ஐட்டம் பாடல்களுக்கு நடனமாட மட்டுமே அதிகமாக பலரும் அணுகுகின்றனர்.
ஒரு கவர்ச்சியான பிம்பத்தை தாண்டி ஒரு நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை எனக்கு இயக்குனர்கள் வழங்க வேண்டும். சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருகிறது. கதையின் தேவைக்கேற்ப முத்த காட்சிகள் இடம் பெற்றால் அவற்றை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் நடிகை தமன்னா அப்போது கூறியிருக்கிறார்.





