- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக அளவில் பாகுபலி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது எப்படி? - நடிகை தமன்னா போட்டுடைத்த...

உலக அளவில் பாகுபலி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது எப்படி? – நடிகை தமன்னா போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. கல்லூரி வியாபாரி அயன் சுறா பையா தோழா படிக்காதவன் வேங்கை என தமிழில் பல படங்களில் நடித்தவர் தமன்னா. இப்போது பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக தமன்னா நடித்து வருகிறார்.

நடிகை தமன்னாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம்தான். 2 பாகங்களாக வெளியான இந்த மன்னர் காலத்து படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படங்களில் 2 கதாநாயகிகளாக அனுஷ்கா மற்றும் தமன்னா நடித்திருந்தனர்.

- Advertisement -

சமீபத்தில் பாகுபலி படம் குறித்து நடிகை தமன்னா வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா சமீப காலமாக சில படங்களில் சிறப்பு பாடல்களில் மட்டுமே குத்தாட்டம் ஆடுபவரமாக அதிகம் தோன்றுகிறார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் அவர் ரஜினியுடன் இணைந்து காவாலய்யா என்ற பாடலுக்கு நடனம் ஆடியது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை தமன்னா பாகுபலி படம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது நடிகை தமன்னா கூறியதாவது, இப்போது திரும்பிப் பார்க்கும்போது பாகுபலி படத்திற்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் சரியானதாகவும் அற்புதமானவும் தெரிகிறது. அந்த நேரத்தில் ஒரு பிராந்திய மொழி திரைப்படத்திற்காக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டை செலவிடுவது சாதாரண விஷயம் அல்ல.

- Advertisement -

அப்போதைய சந்தை சூழ்நிலையை பார்த்தால் அது மிகப்பெரிய ஆபத்தான ஒரு முயற்சியாகவே கருதப்பட்டது. வணிக ரீதியாக படம் தோல்வியடைந்து இருந்தால் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இயக்குனர் ராஜமவுலி தொலைநோக்கு பார்வையுடன் எந்த இடத்திலும் சமரசம் செய்யாமல் பாகுபாலி படத்தை உருவாக்கினார். அந்த உறுதியும் நம்பிக்கையும் தான் பாகுபலி படத்தை உலக அளவில் வெற்றி பெற வைத்தது.

இல்லை எனில் வணிகரீதியாக பல சவால்களை பாகுபலி படம் சந்தித்திருக்கும் என்று தமன்னா கூறியிருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பாகுபலி படம் அதன் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி 2 இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய படங்களாக கருதப்படுகின்றன. இந்த படங்கள் இந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் புதிய சந்தையையும் அங்கீகத்தையும் உருவாக்கி தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்