தமிழ் சினிமாவில் சில இளம் இயக்குனர்கள் மாஸ் ஹிட் படங்களை தந்து அசத்தி விடுகின்றனர். அதுவும் அவர்கள் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகின்றனர். முதல் படம்தான் என்றே தெரியாத அளவுக்கு அனுபவம் மிக்க ஒரு படத்தை தங்களது படைப்பாக தந்து அசத்தி விடுகின்றனர்.
அந்த வரிசையில் கடந்தாண்டில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து. இதுதான் அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ஆனால் இன்னும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலே, இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கூறியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை.
அதே போல் கடந்தாண்டில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்போது அவர் மதுரை அன்பு தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளார். அவரும் இப்போது ஸ்கிரிப்ட் இன்னும் ரெடியாகலே, 3 மாதம் டைம் கொடுங்க என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் சித்தா வீரதீர சூரன் 2 ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன் 2 படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. ஆனாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் அடுத்த படத்தை இயக்க அருண்குமார் கமிட் ஆகி விட்டார்.
ஆனால் இதுவரை அவர் கதையை ரெடி செய்யவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம், இன்னும் நான் ஸ்கிரிப்ட் ரெடி செய்யவில்லை. 3 மாதம் ஆகும் என்று கூறியிருக்கிறார். அதேபோல் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 51 படத்தை இயக்க உள்ள டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இன்னும் ஸ்கிரிப்ட் ரெடி செய்யவில்லை என்று கூறியதால் படப்பிடிப்பு துவங்கப்படாமல் உள்ளது.
இப்படி மாஸ் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களை தயாரிப்பு நிறுவனங்கள் கமிட் செய்த நிலையில், அவர்கள் அடுத்த படங்களின் ஷூட்டிங்கை துவங்காமல் இப்படி ஸ்கிரிப்ட் ரெடி செய்யவே 3 மாதங்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்வதால், தயாரிப்பாளர்கள் பயங்கரமாக அப்செட் ஆகியிருக்கின்றனர். ஒரு கதையை ரெடி செய்ய இப்படி லேட் பண்றாங்களே என்றும் தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.





