நடிகர் விஜயகுமார் மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். இப்போது அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை வனிதா விஜயகுமார் கதை திரைக்கதை எழுதி அவரே டைரக்ட் செய்து நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் தற்போது ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை முறைப்படி ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியதாக படத்தின் டைரக்டர் வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால் படம் வெளியான நிலையில், இப்போது அந்த பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராத்திரி சிவராத்திரி பாடல் விவகாரத்தில் சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்த வனிதா விஜயகுமார் தரப்பு அந்த பாடலை பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே பாடல் காப்பி ரைட் விவகாரத்தில் இளையராஜாவுக்கும் சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் பிரச்னை உள்ள நிலையில் இப்போது வனிதா விஜயகுமார், சோனி மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி வாங்கிய நிலையில், தன்னிடம் அனுமதி பெறாத டைரக்டர் வனிதா விஜயகுமார் மீது இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, சின்ன வயசுல இருந்து அவர் வீட்டுல நான் குழந்தையாக வளர்ந்திருக்கேன். சில விஷயங்களை பேச முடியாது. உண்மையை சொன்னா தப்பாயிடும். வேண்டாம். நான் இளையராஜா வீட்டில் பூஜை செய்திருக்கேன். ஜீவா அம்மாகிட்ட லாக்கர் சாவி வாங்கி நகை எல்லாம் எடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்திருக்கேன்.
அந்த வீட்டுக்கு நான் அவ்வளவு உழைச்சிருக்கேன். அந்த குடும்பத்துல நான் ஒருத்தி. அந்த வீட்டுக்கு நான் மருமகளா போக வேண்டியவங்க. இதுக்கு மேல நான் சொல்ல முடியாது என்று நடிகை வனிதா விஜயகுமார் அழுதபடியே கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள் உள்ளனர். இதில் யாருக்கு வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருந்தார்கள்? ஏற்கனவே வனிதா விஜயகுமார் 3 திருமணங்களை செய்து கணவன்களை விவாகரத்து செய்தவர். இந்த சூழலில் இளையராஜா வீட்டுக்கு நான் மருமகள் ஆக வேண்டியவர் என்று அவர் பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





