தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் வரலட்சுமி அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தமிழில் வரலட்சுமி சரத்குமாருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. தாரை தப்பட்டை சண்டக்கோழி 2 சர்கார் விக்ரம் வேதா நிபுணன் மாரி 2 நீயா 2 கன்னிராசி ஹனுமான் ராயன் மதகஜ ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதில் சில படங்களில் வில்லி கேரக்டரிலும் அவர் நடித்திருந்தார்.
குறிப்பாக சண்டக்கோழி 2 விஷால் படத்திலும் சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் அவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் அதிக கவனம் பெற்றது. சில படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடித்தும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். கல்லூரி காதல் போன்ற தனது படங்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முதலில் நடிக்க கமிட் செய்ய இருந்தது வரலட்சுமி சரத்குமாரை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அவர் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
நடிகர் சரத்குமார் – சாயாதேவி தம்பதிக்கு பிறந்த 2 மகள்களில் மூத்த மகள்தான் வரலட்சுமி. இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நிக்கோலாய்க்கு 15 வயதில் மகள் இருக்கிறார். 2வது தாரமாக அவர் வரலட்சுமியை திருமணம் செய்திருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த வரலட்சுமி, திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்க போதிய வாய்ப்பின்றி இருந்து வருகிறார். அதனால் ஜீ5 தொலைக்காட்சியில் நடந்து வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிடி ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார். சினிமாவில் இமேஜ் இல்லாத நடிகைகள் பலரும், இதுபோன்ற டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, என்னால் என் கணவரை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் என் அப்பா அல்லது அம்மாவுக்கு வாய்ஸ் நோட்டில் என் மீது சிறு குழந்தை போல கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருக்கிறார். அவர்களும் என் கணவருக்கு சப்போர்ட் செய்கின்றனர் என்று வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





