நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். அவரது கணவர் நிக்கோலாய் நிக்கோலாய் சச்தேவ். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இந்த நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையான பதிலை தந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒவ்வொரு தம்பதியினரும் தங்களது விருப்பம் மற்றும் மனநிலையை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை? என்று கேட்பது மிகவும் எளிதாக இருக்கிறது.
ஆனால் அந்த குழந்தை பிறந்த பிறகு அதை பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களாகிய நாங்கள் தானே? குழந்தையை பெற்றுக் கொள்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அந்த குழந்தையை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஒரு குழந்தையை பார்த்துவிட்டு ச்சோ ஸ்வீட் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் சென்று விடலாம்.
ஆனால் அந்த குழந்தையை வளர்ப்பது பள்ளிக்கு அனுப்புவது அதன் தேவைகளை கவனிப்பது என அனைத்து பொறுப்புகளையும் பெற்றோர்களாகிய நாங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு அதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாங்கள் மனதளவில் தயாராக இருக்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும்.
குழந்தையை பெற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இல்லை என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அது ஒரு பெற்றோர் எடுக்கக்கூடிய நல்ல முடிவாக தான் நான் பார்க்கிறேன். அரசாங்கத்தின் மூலமாக குழந்தையை தத்தெடுத்து வளருங்கள். ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் குழந்தையை தத்தெடுங்கள். நானும் எனது கணவரும் ஏற்கனவே அனாதை குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறோம்.
ஏராளமான குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவருக்கு வாழ்க்கை கொடுக்க முடியும். எனது வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் தான் அது என்னுடைய குழந்தையாக பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாரிடமும் என்னால் தாய்மையுடன் இருக்க முடியும். அதனால் ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுப்பது அதை அன்புடன் வளர்ப்பது என்பதுதான் முக்கியம் என்று நான் நம்புகிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியிருக்கிறார்.





