கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை விசித்ரா. தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமான இவருக்கு மடிப்பு அம்சா என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் அப்போது இருந்தது. அந்த முதல் படத்தில் அந்த பெயரில்தான் அவரது கேரக்டர் இருந்தது.
ரசிகன் முத்து வில்லாதிவில்லன் பெரிய குடும்பம் வீரா அமைதிப்படை இராவணன் சின்னத்தாயி அமராவதி சீதனம் எட்டுப்பட்டி ராசா வண்டிச்சோலை சின்ராசு பூந்தோட்டம் பொன்னு விளையற பூமி அரவிந்தன் முத்து குளிக்க வாரீயளா உள்ளிட்ட பல படங்களில் நடிகை விசித்ரா நடித்திருக்கிறார். பெரும்பாலும் கவர்ச்சியான கேரக்டர்கள்தான் அவருக்கு தரப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை விசித்ரா, கேரளாவில் நடந்த படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை ரூமுக்கு வரச்சொல்லி டார்ச்சர் செய்ததாகவும் ஓட்டல் அறையில் தனது அடியாட்களால் தொந்தரவு செய்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அது தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணா தான் என்றும் தெரிய வந்தது.
இப்போது கணவர் மற்றும் 2 மகன்களுடன் கேரளாவில் செட்டில் ஆகியுள்ள நடிகை விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் கடைசியில் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு அது வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை விசித்ரா கூறியதாவது, இப்போது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் குறித்த செய்திகள் வெளியாகின்றன. ஆனால் நான் 100 சதவீதம் அடித்துச் சொல்வேன். தமிழ் சினிமாவில் யார் யோக்கியன் என்றால் அது நடிகர் டி ராஜேந்தர் என்று சொல்வேன் என்று சவால் விடும் விதமாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் டி ராஜேந்தா் மட்டும்தான் தன்னுடன் நடிக்கும் நாயகிகளை, பெண்களை தொடாமல் நடிக்கக் கூடியவர். காதல் பாடல் காட்சிகளில் கூட தன்னுடன் ஆடும் நடிகையை விட்டு 4 அடி தள்ளி நின்று ஆடக் கூடியவர். இதை அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் கட்டாயமாக கடைபிடித்தார். அதே போல் நடிகர் ராமராஜன் அவர் நடித்த படங்களில் இதுவரை மதுபானம் குடிப்பது சிகரட் பீடி புகைப்பது போல் நடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





