- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் போன் வந்தால்… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் -...

அஜீத்குமார் போன் வந்தால்… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் – இப்படியும் ஒரு டைரக்டரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் பிரபு பிரசன்னா சுனில் அர்ஜூன்தாஸ் பிரியா வாரியர் யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாலி அவள் வருவாளா உன்னைக்கொடு என்னைத் தருவேன் படங்களை தொடர்ந்து நடிகை சிம்ரன் இந்த படத்திலும் அஜீத்குமாருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர். அதனால் ஒரு ரசிகனை திருப்திபடுத்தும் விதமான அஜீத்குமாரை காட்சிக்கு காட்சி மாஸ் ஆக காட்டி குட் பேட் அக்லி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டார். அஜீத்குமாரின் புகழ்பாடும் ஒரு படமாக இது அமைந்து விட்டது.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மார்க் ஆண்டனி படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 4வது படம் குட் பேட் அக்லி அவருக்கு மிகப்பெரிய இமேஜை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி தந்துள்ளது. அஜீத்குமார் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக் ரவிச்சந்திரனுக்குதான் தருவார் என்ற தகவலும் பரவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, அஜீத் சார் போன் வந்தாலே எனக்கு பயமாக இருக்கும். இதுவரைக்கும் ஒருமுறை கூட நான் அவரிடம் காஷூவலாக பேசியது கிடையாது. பேசுவோம். ஷேர் பண்ணிக்குவோம். சார் என்னை ரொம்பவும் கம்பர்ட்டபிளாக வெச்சுக்குவார்.

ஆனா அப்பாவை பார்த்தால் ஒரு பயம், பெரிய அண்ணாவை பார்த்தால் ஒரு பயம் இருக்கும் இல்லே. அந்த மாதிரிதான் எனக்கு. அது எப்பவுமே இருக்கு. அது ஏன் என்று எனக்கே தெரியலை. இப்ப வரைக்கும் அஜீத் சார் போன் பண்ணினா ஒரு ரெஸ்பெக்டோட பயம் இருக்கும். நேரடியாக பார்க்கும் போதும் ஒரு பயம் இருக்கும். அது இருக்கும். ஒண்ணுமே பண்ண முடியாது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்