- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கும் கட்டாகுஸ்தி பட நாயகி, போட்றா வெடிய… தரமான சம்பவம் தயாராகுது!

நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கும் கட்டாகுஸ்தி பட நாயகி, போட்றா வெடிய… தரமான சம்பவம் தயாராகுது!

- Advertisement -

தமிழில் ஜகமே தந்திரம், கட்டாகுஸ்தி, ஆக்சன், பொன்னியின் செல்வம் பாகம் 1 மற்றும் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள தக்லைப் படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழப் போகிறேன். நிறைய பேர் திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே பிரிந்து வாழ்கின்றனர். இன்னும் சிலர் விவாகரத்து பெற்று பிரிகின்றனர். அதனால் திருமணத்தில் எனக்கு ஆர்வமில்லை என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

காமெடி ரோலில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெநற்ற நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்றார். இப்போது விடுதலை 2ம்பாகம், வருகிற 20ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

சூரிக்கு விடுதலை படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அவர் தொடர்ந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவர் இதுவரை ஹீரோவாக நடித்த 3 படங்களில் கொட்டுக்காளி படம் மட்டுமே எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

- Advertisement -

விலங்கு வெப் தொடரை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜன். அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து சூரி நடிக்கும் 5வது படமாக இது உள்ளது. இனி காமெடி ரோலில் நடிப்பதில்லை என்ற முடிவில் சூரி இருப்பதால், நாயகனாக இந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்போது பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கும் இந்த படத்தையும் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக, படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்