அஜித்குமார் அவரின் திரைப்படங்களின் புரொமோஷன்களிலோ, ஊடக பேட்டிகளிலோ கலந்துகொள்ள மாட்டார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அஜித் படப்பிடிப்பு தளத்தில் அப்படியே நேர்மாறானவர். அதாவது சக நடிகர்களுடன் மிகவும் சாதாரணமாக சிரித்து பேசுவாராம். கேரக்டர் ஆர்டிஸ்டாகவே இருந்தாலும் அவருக்கு தகுந்த மரியாதையை கொடுப்பாராம். இந்த நிலையில் அஜித்குமார் ரோபோ ஷங்கர் குடும்பத்திற்கே அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் “விஸ்வாசம்”. இத்திரைப்படத்தில் ரோபோ ஷங்கர் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் ரோபோ ஷங்கர் தனது குடும்பத்தை அழைத்து வந்திருந்தாராம்.
அப்போது ரோபோ ஷங்கரின் குடும்பத்தை அஜித் சந்தித்து நலம் விசாரித்தாராம். அதன் பின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம். என்னதான் நேரில் சந்தித்து பேசினாலும் அஜித்துடன் ஒரு புகைப்படம் எடுக்க பலரும் ஆசைப்படுவார்களே. அது போல் அஜித்துடன் ஒரு புகைப்படம் எடுக்க ரோபோ ஷங்கரின் குடும்பத்தினர் ஆசைப்பட்டார்களாம்.

ஆனால் அஜித்குமார் படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார். அதன் பின் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர் கிளம்பும்போது அஜித்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பலாம் என காத்திருந்தார்களாம். அஜித் அப்போது விஸ்வாசம் பட கெட்டப்பில் இருந்திருக்கிறார். உடனே கேரவானுக்கு சென்று அந்த கெட்டப்பை நீக்கிவிட்டு சாதாரணமாக வெளிவந்த அஜித், ரோபோ ஷங்கரின் குடும்பத்தினரோடு அவரே புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அஜித்குமார் செய்த இந்த செயலால் ரோபோ ஷங்கரும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்களாம்.





