- Advertisement -
Homeபொழுதுபோக்குமுழுவேகத்தில் மீண்டும் சினிமாவில் தனது இன்னிங்ஸ்சை துவங்கும் நடிகர் அஜீத்குமார் - அடுத்தடுத்து 3 படங்களில்...

முழுவேகத்தில் மீண்டும் சினிமாவில் தனது இன்னிங்ஸ்சை துவங்கும் நடிகர் அஜீத்குமார் – அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஏகே ரெடி!

- Advertisement -

நடிகர்கள் விஜய் அஜீத்குமார் இருவரும்தான் தமிழ் சினிமாவில் சமகால போட்டியாளர்களாக இருந்தனர். இந்த ஆரோக்கியமான போட்டியால் ரசிகர்களுக்கும் ஒரு உத்வேகம் கிடைத்தது. இதனால் அவர்களது படங்கள் வெளியான போது தயாரிப்பாளர்களுக்கு வணிகரீதியாக லாபம் கணிசமாக கிடைத்தது.

ஆனால் திடீரென நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் முதல்வராகி விட்டார். அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமாரும் கார் ரேஸ் பைக் ரேஸ் என விளையாட்டில் தீவிரம் காட்ட துவங்கி விட்டார். இப்படி 2 உச்ச நட்சத்திரங்களும் அரசியல் விளையாட்டு என போய்விட்டதால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமாத்துறைக்கும் அது வியாபார ரீதியாக பின்னடைவை தந்தது.

- Advertisement -

இதற்கிடையே குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிப்பில் எந்த படமும் உருவாகவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரது ஏகே 64 படப்பிடிப்பு துவங்காமல் தாமதம் நீடிக்கிறது. தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. ரூ. 185 கோடி வரை அஜீத்குமார் சம்பளம் கேட்பதே இந்த பிரச்னை காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படத்தின் அப்டேட் நேற்று மாலை வெளியானது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையில் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பது அஜீத்குமாரின் மனைவி ஷாலினி தான். அவர் முதன்முறையாக இந்த படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

- Advertisement -

மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் டேர் டெவில் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தாவை இயக்கியவர் வெங்கட் பிரபு. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் இது மங்காத்தா 2 பாகமாக உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது.

தொடர்ந்து அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் வேதாளம் விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜீத்குமாரின் படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். இப்படி 3 படங்களில் அடுத்தடுத்த நடிக்க அஜீத்குமார் ஒப்புதல் தந்திருக்கிறார். டேர் டெவில் படப்பிடிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் படம் வரும் ஜனவரியிலும் சிறுத்தை சிவா இயக்கும் படம் அடுத்த ஆண்டு மே ஜூன் மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்