நடிகர் அஜீத்குமார் மிக திறமையான நடிகர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாடல் காட்சிகளில் அழகிய நாயகனாகவும், சண்டை காட்சிகளில் அதிரடி ஹீரோவாகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவர். இயல்பிலேயே அவர் துணிச்சல்காரர் என்பதால்தான் கார் ரேஸ், பைக் ரேஸ் வீரராக இருக்கிறார்.
வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்கள் எப்போதும் யாருக்கும் வாய்ப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில்தான் புத்திசாலித்தனம இருக்கிறது. அதுவும் சினிமாவில் வாய்ப்பு என்பது மிகப்பெரிய அதிர்ஷ்ட கதவுகளை திறந்துவிடும். அப்படிதான் பலரும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர்.
நடிகராக வந்து இயக்குநர் ஆனவர்கள், இயக்குநராக வந்து நடிகரானவர்கள், ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு இறுதியில் காமெடி நடிகரானவர்கள், காமெடி செய்து பிறகு ஹீரோவானவர்கள் என எல்லோருமே அந்தந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் வெற்றியாளர்களாக இருக்கின்றனர்.
ஆனால் அஜீத்குமாரை பொருத்த வரை ஆரம்பத்தில் இருந்தே தனக்கென சில பாலிசிகள் வைத்திருக்கின்றனர். குறிப்பாக உடல் வருந்தும்படியாக ரிஸ்க் ஆன காட்சிகளில் நடிக்க மாட்டார். கேரக்டருக்கான தன்னை மிகவும் வருத்திக் கொள்ள மாட்டார். படத்தின் காட்சிகள், கதைக்கரு, திரைக்கதை என முழுவதும் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவர் மற்றவர்களை மதிப்பது போலவே, அவரையும் மற்றவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான். 23 ஆண்டுகளுக்கு முன் ராஜா என்ற படத்தில் நடித்த போது, அஜீத்குமாரை ஷூட்டிங் ஸ்பாட்டில் வாடா, போடா என ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய ஒரு காரணத்தால், இதுவரை தன் படங்களில் வடிவேலு நடிக்க அஜீத் அனுமதிப்பதில்லை.
டைரக்டர் பாலா இயக்கத்தில் நந்தா, நான் கடவுள் படங்களில் நடிக்க வேண்டியவர் அஜீத்குமார்தான். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஹீரோவை ஒரு நடிகனாக மட்டுமே பாலா நடத்துவார். மரியாதை தர மாட்டார். அதனால்தான் நந்தா, நான் கடவுள் படங்களில் சூர்யா, ஆர்யா நடித்து பேர் வாங்கினா். ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் மொட்டையடித்து நடிக்க மாட்டேன் என சிலநாட்கள் ஷூட்டிங் சென்று அதன்பின் அஜீத் விலகி கொண்டதால்தான், சூர்யாவுக்கு அது மாஸ் ஹிட் படமாக அமைந்தது. இப்படி தனது பாலிசிகளால் மாஸ் ஹிட் பட வாய்ப்புகளை இழந்தவர்தான் அஜீத்குமார்.





