- Advertisement -
Homeபொழுதுபோக்குஅக்டோபரில் தொடங்கப்போகும் அஜித் படத்தை இயக்கப்போவது இவர்தான்... ஏகேவுக்கு ஜோடியாக இரண்டு உச்ச நடிகைகளிடம் பேச்சுவார்த்தையும்...

அக்டோபரில் தொடங்கப்போகும் அஜித் படத்தை இயக்கப்போவது இவர்தான்… ஏகேவுக்கு ஜோடியாக இரண்டு உச்ச நடிகைகளிடம் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறதா…

- Advertisement -

அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து வருகிறார். அவரது அஜித் ரேசிங் குழு, அங்கு நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. அதேசமயம் கார்பந்தயத்தின்போது அஜித்குமார் விபத்துக்குள்ளாகும் காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக அவரது ரசிகர்கள் கலங்கி போனார்கள். நல்வாய்ப்பாக அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிந்த பிறகு அவர்கள் நிம்மதி அடைந்தனர். இப்படி கார் பந்தயத்தில் கலக்கி வரும் அஜித்குமார், அக்டோபர் மாதம் தனது 64வது திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். இது குறித்து அஜித்குமாரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

தரமான திரைப்படங்களை கொடுப்பது என நினைத்திருப்பதாகவும், அடுத்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் கூறியிருந்தார். அது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையான மே மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனை வைத்தே அந்த திரைப்படம் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட இருக்கிறது என்பதை சினிமா விமர்சகர்கள் உறுதி செய்தனர்.

இருப்பினும் அஜித்குமாரின் 64-வது திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி மட்டும் துரத்திக் கொண்டே வந்தது. இந்த பட்டியலில் விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் என ஏராளமான இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டன. யாருமே எதிர்பார்க்காத வகையில் தனுஷின் பெயரும் இடம் பெற்றது. அவர் அஜித் குமாரை சந்தித்து ஒரு கதையின் ஒன் லைனை கூறியதாகவும், இது தொடர்பான கதையை அவர் மெருகேற்றி வருவதாகவும் சொல்லப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழலில்தான் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. ஏற்கனவே அஜித்குமாரை வைத்து அவர் இயக்கி இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும், கமர்சியல் திரைப்படத்திற்கு இது போதும் என்ற மனநிலை இருந்ததால் குட் பேட் அக்லி கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் படத்தை தயாரித்த மைத்திரி மூவிஸ் நிறுவனமே அஜித்தின் அடுத்த படத்தையும் எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஜிவி பிரகாஷ் தான் இதற்கும் இசையமைக்க இருக்கிறாராம். கதாநாயகியாக நயன்தாரா அல்லது பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்து உள்ளது. அஜித் சொன்னதைப் போல இதனை 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்