அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக தகவல் வெளிவந்தது. இதனால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது.

சில சினிமா பத்திரிக்கையாளர்கள், லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் “விடாமுயற்சி” திரைப்படம் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனிடம் கைமாறவுள்ளதாக கூறி வந்தனர். மேலும் சிலர் இத்திரைப்படம் டிராப் ஆகவும் வாய்ப்புள்ளதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் வெளிநாட்டிற்கு லுக் டெஸ்ட் எடுக்க சென்றிருப்பதாக செய்திகள் வந்தன.
இதனை கொண்டு “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவலும் வெளிவந்தது. அதாவது “விடாமுயற்சி” திரைப்படம் காதலை மையப்படுத்தி உருவாகும் ஒரு ஆக்சன் திரைப்படம் என கூறப்பட்டது.

அஜித்குமார் தனது கெரியரின் தொடக்கத்தில் ரொமான்டிக் ஹீரோவாகவே வலம் வந்தார். ஆனால் “அமர்க்களம்” திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் மாஸ் ஹீரோவாகவே இப்போது வரை நடித்து வருகிறார். ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படத்தில் மீண்டும் அஜித்குமார் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இணையத்தில் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித்குமார் மிகவும் ஸ்லிம்மாக தென்படுகிறார். அவர் “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக இவ்வாறு தனது உடல் எடையை குறைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. அந்த புகைப்படம் இதோ…






