- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் அஜித்குமார்? விடாமுயற்சி படத்தை குறித்து வெளிவந்த செம அப்டேட்!

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் அஜித்குமார்? விடாமுயற்சி படத்தை குறித்து வெளிவந்த செம அப்டேட்!

- Advertisement -

அஜித்குமார் தொடக்கத்தில் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். இளம் பெண்களின் மனதில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித், “அமர்க்களம்” திரைப்படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

அதன் பின் முழுக்க முழுக்க மாஸ் கலந்த ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் தற்போது அஜித் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

- Advertisement -

இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மே மாதம் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிவுள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

எனினும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் இத்திரைப்படத்திற்கு லோகேஷன் பார்க்க வெளிநாடு சென்ற செய்தி வெளிவந்தது. தற்போது இருவரும் இந்தியா திரும்பியுள்ள நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தின் பெரும்பான்மையாக காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து ஒரு செமத்தியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் காதலை மையப்படுத்திய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் பல வருடங்களாக வெறும் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது அஜித்குமார் தனது ரூட்டை மாற்றி காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்