- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ரிலீஸிற்க்கு தயாராகி வரும் குட் பேட் அக்லி... படத்தில் இருந்து வெளியான புதிய அப்டேட்...

பொங்கல் ரிலீஸிற்க்கு தயாராகி வரும் குட் பேட் அக்லி… படத்தில் இருந்து வெளியான புதிய அப்டேட் இதோ…

- Advertisement -

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது அஜித்தின் துணிவு திரைப்படம். கிட்டத்தட்ட அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதனால் சற்று சோகத்திலேயே இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதற்கும் துணிவு படம் முடிந்து சில மாதங்களிலேயே அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

 

- Advertisement -

விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனை மகிழ் திருமேனி இயக்குவதாகவும் அப்போதே லைகா நிறுவனம் தெரிவித்தது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

 

- Advertisement -

ஆனால் படத்தில் இருந்து ஒரு தரமான அப்டேட் இதுவரைக்கும் வெளியிடப்படவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து நிதி நெருக்கடி என்று அரசல் புரசலாக தகவல் வெளியாகிறது. ஆனால் இதுவரைக்கும், ஏன் இந்த தாமதம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.

 

இதனால் அஜித் ரசிகர்கள் சோர்ந்து போயிருக்க, அவர்களை குஷிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் குமாரின் தீவிர ரசிகரான அவர், குட் பேட் அக்லி என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

 

இதிலும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவே நடிக்கிறார். நடிகர்கள் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத அஜித்தை காணலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு ஏற்றது போலவே படத்தின் போஸ்டர்களிலும் அஜித் வித்தியாசமான கெட்டப்பில் காட்சி அளிக்கிறார்.

 

பொங்கல் அன்று இந்த திரைப்படத்தை நிச்சயமாக வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. தற்போது பல்கேரியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நாளையுடன் அஜித் குமார் நிறைவு செய்கிறாராம். அதன் பிறகு அவர் கார் ரேசில் கலந்து கொள்வதற்கான பணிகளில் ஈடுபட இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக அடுத்த ஆண்டு மே மாதம் ஆகும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்