பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் செல்லப் பிராணிகளை ஆசையாக வளர்க்கின்றனர். நாய்க்குட்டி பூனைக்குட்டிகளை செல்லமாக வளர்க்கின்றனர். ஆனால் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் வீட்டு வாசல்களில் தான் நாய்களை காக்க வைக்கின்றனர். வீட்டுக்கு வெளியே தான் பூனைகளை அனுமதிக்கின்றனர்.
ஆனால் பணக்காரர்கள் செல்வசெழிப்பு மிக்கவர்கள் வீட்டுக்குள் வரவேற்பறை படுக்கையறை சமையலறை என எல்லா இடங்களிலும் நாய்களை பூனைகளை ஜாலியாக நடமாட விடுகின்றனர். வீட்டுக்குள் ஒரு சக மனிதரை போலவே அதை பாவித்து அதனுடன் படுக்கையில் ஒன்றாகவே படுத்து உறங்குகின்றனர்.
ஒரு குழந்தையை போல் நாய்களை பூனைகளை கொஞ்சுவது குளிப்பாட்டி விடுவது உணவு ஊட்டி விடுவது என ரொம்பவும் எல்லை மீறிய பாசத்தை சிலர் வெளிப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் அதுவே அவர்களை பாதிக்கும் அபாய நிலைக்கு தள்ளி விடுகிறது. அதிலும் பல நடிகர் நடிகைகள் இதை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளனர்.
அப்படிதான் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இப்போது விபரீதம் நடந்திருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு பூனைக்குட்டியை ஆசையாக ஸ்ருதிஹாசன் வாங்கி வந்திருக்கிறார். அதை எந்நேரமும் அதை கையில் தூக்கி வைத்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட அலர்ஜியால் ஸ்ருதியின் முகம் முழுவதும் தடிப்புகளும் கொப்பளங்களும் வந்துள்ளது.
மாம்பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட அலர்ஜி என கருதிய அவர் பிறகு தோல் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்த போதுதான் பூனையின் ரோமங்கள் பூனையின் உமிழ்நீரால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டு தடிப்புகளும் கொப்பளங்களும் உருவானது தெரிய வந்துள்ளது.
இதற்காக ஸ்ருதிஹாசன் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட போதும் அந்த தடிப்புகளும் கொப்பளங்களும் சிறிதும் குறையவில்லை. இதனால் அந்த பூனைக்குட்டியை அதன் உரிமையாளரிடமே திருப்பி தந்துவிட்டேன் என்று தனது வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசன் தற்போது தெரிவித்துள்ளார். தேவையா இந்த வேண்டாத வேலை? என்று ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.





