- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன? ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய...

மலையாள நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன? ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய அந்த விவகாரம்தான் காரணமா?

- Advertisement -

மலையாள சினிமாத்துறையில் திரைப்பட கலைஞர்களுக்காக அம்மா சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் துவங்கியது முதல் 31 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளாக நடிகர்களே இருந்து வந்தனர் இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த அம்மா சங்கத் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இந்த அமைப்பின் பொறுப்புக்கு வந்தனர்.

அம்மா சங்கத்தின் தலைவர் பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகைகள் தேர்வாகினர். நடிகை ஸ்வேதா மேனன் அம்மா சங்கத்தின் தலைவராகவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.. மேலும் ஸ்வேதாமேனன் தலைமையில் 17 பேர் கொண்ட பெண் நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் அம்மா சங்கத்தின் நிர்வாகிகளாக பதவியேற்ற 10 மாதங்களில் அதன் தலைவராக இருந்த ஸ்வேதா மேனனும் அந்த அமைப்பின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து அந்த சங்கத்தை விட்டு வெளியேறி உள்ளனர். பதவிக்காலத்தின் போது தலைவி ஸ்வேதா மேனனுக்கும் பொதுச்செயலாளர் குக்கூ பரமேஸ்வரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஸ்வேதா மேனனுக்கு தெரியாமல் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரனும் பொருளாளர் உன்னி சிவபாலுவும் இணைந்து அலுவலக மேலாளர் அதுல்யாவை பணிநீக்கம் செய்தனர். இது சர்ச்சையான நிலையில் அதுல்யா மீண்டும் பணியில் அமர்த்தபட்டார். அத்துடன் பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதற்கிடையே பிப்ரவரி மாதம் நடந்த குடும்ப சங்கமம் விழாவுக்காக ஒரு கோவில் அறக்கட்டளையிடம் இருந்து அம்மா சங்கத்திற்காக 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது.

- Advertisement -

இதற்கான கணக்கை காட்டாதது அம்மா அமைப்புக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகளை தீர்க்க பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அம்மா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று காக்கநாட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்களில் மோகன்லால் ஒருவர் மட்டுமே கலந்துக்கொண்டார். நடிகர் மம்முட்டி உள்ளிட்ட மற்ற முக்கிய நடிகர்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் குடும்ப சங்கமம் விழாவிற்காக பெறப்பட்ட தொகை 70 லட்சம் ரூபாய் குறித்த விவாதம் நடந்தது.

அப்போது நடிகர் பாபுராஜ் ஜாக்கோப் தலைமையிலான உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இந்த தீர்மானத்தில், தான் நடுநிலை வகிப்பதாகவும் நடிகர் மோகன்லால் அறிவித்தார். நிர்வாக குழுவுக்கு இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்ததால் தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் கூட்டாக ராஜினாமா செய்து கூண்டோடு வெளியேறியது. ஸ்வேதா மேனன் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதை அடுத்து தற்போது தற்காலிக குழு ஒன்று அமைக்கப்பட்டு ரமேஷ் பிஷாரடி தலைமை ஏற்று சங்க பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்