- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்விக்கு இன்று...

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்விக்கு இன்று கிடைக்குது பதில் – ப்ளீஸ் வெயிட் ப்ரோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில், முன்பெல்லாம் சினிமா சார்ந்த செய்திகள் என்பதை நாளிதழ்களில் வாசித்தால்தான், ரசிகர்களுக்கு தெரிய வரும். நாளுக்கு நாள் சினிமாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் சினிமா சார்ந்த வார, மாத பத்திரிகைகள் வரத்துவங்கின.

இதில் சினிமா சார்ந்த விஷயங்கள், புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள், பட்பபிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படங்கள், சினிமா கலைஞர்களின் பேட்டிகள் என பல விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துக் கொண்டனர்.

ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்கள் நடிக்கும் படங்களை பற்றிய விவரங்கள் கூட தாமதமாக தான் ரசிகர்களுக்கு தெரிய வரும். ஏறக்குறைய படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இவரது இயக்கத்தில் ரஜினி அல்லது கமல் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த நடிகை நடித்திருக்கிறார் என்பது பத்திரிகை செய்திகளால் உறுதியாகும்.

ஆனால் இப்போது சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வீச்சால், ஒரு படம் குறித்து ஒரு இயக்குநர், நடிகர் பேச துவங்கியதில் இருந்தே, அடுத்தடுத்து அப்டேட்டுகள் குவிந்து விடுகின்றன. படம் ரிலீஸ் ஆகும் வரை ஏராளமான பிரமோசன்கள் படத்துக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், முக்கிய பிரேமாசன் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 மற்றும் 3 படங்களில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில், கமல் 233 படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல் இந்த படத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பிரமோ வெளியாகிறது. இதில் மணிரத்னம் இயக்கும் அந்த படத்தின் பெயரும் வௌியாவதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கமல் ரசிகர்கைள இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்