கடந்த சில நாட்களாகவே இணையத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக இருந்து வருவது அம்பானி வீட்டின் திருமணம் தான். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சென்ட்டிற்க்கும் கடந்த ஜூலை 12-ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகே வியக்கும் அளவிற்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்த திருமணத்திற்கு உலக பிரபலங்கள் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இந்தியாவில் துவங்கி வெளிநாடுகள் வரை உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் குவிந்து இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக மாற்றினர். கடந்த ஆண்டு நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் தற்போது நிறைவடைந்து உள்ளது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாகவே பெரிய அளவில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்ற வேளையில் தற்போது அவர்களது திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி செலவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவர்களது குடும்பத்தை பற்றி மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அம்பானியின் திருமணத்தின் போது சிவப்பு நிற பட்டுடை அணிந்து ஒரு செல்ல நாய் சுற்றி வருவதை பலரும் கண்டிருக்கலாம். அந்த நாய் குறித்தும் அதற்கு கிடைக்கும் சலுகைகள் குறித்தும் தான் தற்போது இந்த பதிவில் காண உள்ளோம். அந்த வகையில் அந்த சிவப்பு நிற பட்டுடை அணிந்த நாயின் பெயர் ஹேப்பி.
பெயருக்கு ஏற்ற மாதிரியே அந்த செல்லப்பிராணியை அனந்த் அம்பானி மிகவும் கவனிப்புடன் பராமரித்து வருகிறாராம். அந்த வகையில் ஹேப்பிக்கு என தனியாக ஒரு காரை அவர் ஒதுக்கி இருக்கிறாராம். ஹேப்பி தற்போது பயணிக்கும் கார் பென்ஸ் ஜி 400 டி என்கிற கார். அந்த காரின் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
அதோடு ஹேப்பிக்கு என தனியாக பராமரிப்பாளர், அதற்கான உணவு என லட்ச கணக்கில் செலவு செய்கிறாராம். அதுபோக ஆனந்த் அம்பானி அமெரிக்காவுக்கு சென்றால் தனி விமானத்தில் ஹேப்பியுடன் தான் பயணிப்பார் என்றும் எங்கு சென்றாலும் ஆனந்த் அம்பானியுடன் ஹேப்பி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.





