- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் வெற்றி விழாவில் கலந்துக்கொள்ளாத முக்கியமான நபர் - மேடையில் பேசிய யாருமே...

லியோ படம் வெற்றி விழாவில் கலந்துக்கொள்ளாத முக்கியமான நபர் – மேடையில் பேசிய யாருமே அவரை பத்தியே நினைக்கலையே…ஏன்?

- Advertisement -

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், கடந்த 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது, தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்பட யுனிவர்ஸ் என பல ஆயிரக்கணக்கான ஸ்கிரீன்களில் இந்த படம் வௌியானது.

லியோ படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் 148.5 கோடி ரூபாய் இலக்கை வசூலில் அடைந்தது. தொடர்ந்து 7 நாட்களில், 461 கோடி ரூபாய், 12 நாட்களில் ரூ. 540 கோடி ரூபாய் என வசூல் சாதனையை புரிந்தது. ஜெயிலர் படத்தின் வசூல், 525 கோடி ரூபாய் என்ற நிலையில், இது அந்த படத்தின் வசூல் சாதனையை கடந்தது.

- Advertisement -

லியோ படத்தின் இசை வெளியீட்டு ரத்து செய்யப்பட்டதால், விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம் 1ம் தேதி, லியோ படத்தின் வெற்றி விழா அதே நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், விஜய், திரிஷா, அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த நீண்ட நாள் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

- Advertisement -

மேலும் அரசியலுக்கு வருவது உறுதி என்பதற்கான சில விஷயங்களையும் பொடி வைத்து, ரசிகர்களுக்கு உணர்த்தி விட்டார். கப்பு முக்கியம் பிகிலு என்ற வசனம் மூலம், அரசியலில் தனக்கான வெற்றி காத்திருப்பதையும், அரசியல் கட்சி துவங்கினால் ரசிகர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.

இதற்கிடையே லியோ படத்தின் வெற்றி விழாவில், படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் பங்கேற்கவில்லை. படத்தில் பிஜிஎம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒருவரான அவர் வராதது ரசிகர்களிடம் பலத்த ஏமாற்றத்தை, அதிருப்தியை தந்துள்ளது. மேடையில் பேசியவர்களும் அனிருத் பற்றி பேச மறந்துவிட்டனர். வெளியூரில் அவர் இருந்தால் கூட, ஒரு மெசேஜை கன்வே செய்திருந்தால், விழாவில் அதை காட்டி இருக்கலாமே என, அங்கலாய்க்கின்றனர் அனிருத்தின் தீவிர ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்