- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது நண்பருக்காக தூது சென்ற இசையமைப்பாளர் அனிருத், ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் அடுத்து இயக்கப்...

தனது நண்பருக்காக தூது சென்ற இசையமைப்பாளர் அனிருத், ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் அடுத்து இயக்கப் போகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா? – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நயன்தாராவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்எஸ் சிவாஜி, சகோதரியாக ஜாக்குலின் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நயன்தாராவை ஒன்சைடாக காதலிக்கும் கேரக்டரில் மளிகை கடை உரிமையாளராக யோகிபாபுவும், இன்ஸ்பெக்டராக சரவணனும் நடித்திருந்தனர். போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார். விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றி பெற்றது. அதன்பிறகு, ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

நெல்சன் இயக்கிய படங்களுக்கு தொடர்ந்து அனிருத் இசையமைத்து வருகிறார். இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்திலும் அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகும் படம் குறித்த கேள்வி எழுந்த நிலையில், தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான தேவாரா படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அனிருத். ஜூனியர் என்டிஆருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில், தனது நண்பர் நெல்சன் குறித்து அவரிடம் பேசியிருக்கிறார் அனிருத். உங்களுக்காக ஒரு சிறப்பான கதையுடன் அவர் காத்திருக்கிறார் என்று கூறி இருவரையும் சந்திக்க செய்துள்ளார். அப்போது நெல்சன் சொன்ன கதை ஜூனியர் என்டிஆருக்கு மிகவும் பிடித்துப்போய் உடனே சம்மதித்துள்ளார். இது ஒரு காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தன் நண்பருக்காக, ஜூனியர் என்டிஆரிடம் தூது சென்ற அனிருத்தை இதுதான் சிறந்த நட்பு என பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்