நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். அந்த வீடியோக்களின் தொகுப்பாக கிளாடியேட்டர் என்ற ஆவணப்படம் வருகிற நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தை வினியோகம் செய்ய எந்த வினியோகஸ்தரும் முன்வராத நிலையில் அஜீத்குமாரே தியேட்டர்களில் வினியோகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிளாடியேட்டர் படம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, இந்த படத்தை பொருத்த வரை நான் உறுதியாக சொல்றேன். இந்த படம் ஒரு ஷோவை தாண்டாது. இந்த மாதிரி டாகுமென்ட்ரி படங்களை ரசிக்கிற மனநிலையில் யாருமே கிடையாது.
நடிகை நயன்தாரா இப்படிதான் அவங்களோட டாகுமென்ட்ரி படத்தை பெருசா எதிர்பார்த்தாங்க. அந்த படத்துக்கு என்ன நிலைமை ஏற்பட்டது? அதுமாதிரி தான் இந்த படமும் இருக்கப் போவுது. அப்புறம் கிளாடியேட்டர் ஆவண படத்தை எடுத்த ஏஎல் விஜய் எல்லாம் ஒரு பெரிய டைரக்டர் கிடையாது.
அவர் எடுத்த மதராசப்பட்டணம் படம் மட்டுமே பெரிய அளவில் கவனம் பெற்றது. மற்றபடி அவர் இயக்கிய எந்த படமும் பெருசாக போகவில்லை என்பதுதான் உண்மை. அஜீத்தை வெச்சு கீரிடம் என்ற படம் எடுத்தார். அந்த படம் எடுக்கும் போது அஜீத்குமார் அவ்வளவு உச்சத்தில் இருந்தார். அதுல போய் அஜீத்குமார் அடிவாங்குகிற மாதிரி ஒரு கேரக்டர் பண்ண வெச்சிருந்தார்.
டைரக்டர் என்றால் பளிச் என்று ஹீரோவுக்கேற்ற கதைகளை கேரக்டர்களை பண்ண வேண்டும். அதை எல்லாம் அஜீத்குமார் கவனிக்கிறது இல்லை. நான் சொல்ற மாதிரி படம் எடுக்கிற டைரக்டர் எனக்கு இருந்தால் போதும் என்று அஜீத் நினைக்கிறார். அதுதான் அவரது தோல்விக்கு முக்கிய காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் கிளாடியேட்டர் படத்தை எப்படியாவது ஓடச் செய்யும் முயற்சியாக தான் சமீபத்தில் விஜயை லண்டனுக்கு வரவழைத்து அவர் தன்னுடன் இருக்கும் காட்சிகளை கிளாடியேட்டர் படத்தில் வரும்படி அஜீத்குமார் செய்திருக்கிறார். இது லாப நோக்கத்தில் வணிக நோக்கத்திலான ஒரு சந்திப்பே தவிர விஜய் அஜீத்குமார் நட்பில் விளைந்த சந்திப்பு அல்ல என்றும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.





