- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் இடைத்தேர்தலில் விஜயின் பழைய பிம்பம் எடுபடுமா? - 120 நாட்கள் தவெக ஆட்சியை பார்த்த...

வரும் இடைத்தேர்தலில் விஜயின் பழைய பிம்பம் எடுபடுமா? – 120 நாட்கள் தவெக ஆட்சியை பார்த்த பிறகும் மக்களின் ஆதரவு இனி கிடைக்குமா?

- Advertisement -

அதிமுக – திமுக ஆட்சிகள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பான ஒரு சூழலில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது ஒரு மாற்றமாக அரசியல் களத்தில் தோன்றியது. மேலும் அவர் பேசிய பேச்சும் கொடுத்த வாக்குறுதிகளும் திமுக குறித்த விமர்சனங்களும் ஆஹா விஜய் தான் சரியான தேர்வு என்று விசில் சின்னத்துக்கு மக்கள் ஆதரவு தந்து 108 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் விஜயின் செயல்பாடுகளும் திட்டங்களும் அவரது அமைச்சர்களும் அவர்களது அறிவிப்புகளும் சட்டசபையில் அவர்களது செயல்பாடுகளும் தேர்தல் வாக்குறுதிகளில் ஏமாற்றிய விதமும் ஓட்டுப் போட்ட மக்களை அப்செட் ஆக செய்துவிட்டது. ஒரு அறிக்கையை கூட தமிழில் வாசிக்க தெரியாத ஒரு கூட்டமாக தவெக சட்டசபையில் சொதப்பி வருகிறது.

- Advertisement -

மேலும் விஜய் முதல்வராக மாறாமல் இன்னும் நடிகராக சட்டசபையில் நடித்துக்கொண்டும் உடல் சைகை காட்டிக்கொண்டும் அதை ரீல்ஸ் எடுத்தும் அவரை புகழும் கூட்டத்தை பார்த்து மக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொன்ன பொதுவான கருத்தை, தகுதியற்ற தலைவர் என்று எங்களை தான் சொல்கிறார் என்று தவெக வினர் தானாகவே முன்வந்து இருப்பது ஒருபுறம் காமெடியாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வழக்கமாக ஒரு தொகுதி எம்எல்ஏ இறந்து விட்டால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். ஆனால் இந்த 2 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்டு ஜெயித்த 2 எம்எல்ஏக்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் தாவி விட்டனர். இப்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

- Advertisement -

அதிமுகவுக்கு துரோகம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போட்ட மக்களை செல்லாக்காசாக மதிக்காத அவர்கள் மீண்டும் அதே மக்களிடம் இப்போது ஓட்டுக் கேட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அந்த தொகுதிகளில் விஜய் வந்து முகம் காட்டி விட்டால் மக்கள் தவெகவுக்கு வழக்கம் போல் ஓட்டை அள்ளித் தந்து விடுவார்கள் என்று தவெக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் உண்மையில் அதிமுக பக்கம் இருந்து தவெக பக்கம் தாவிய அந்த 2 வேட்பாளர் மீதும் தொகுதி மக்கள் பலத்த கோபத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்த மக்களும் ஆவேசத்தில் உள்ளனர். இதில் விஜய் நடத்திய 120 நாட்கள் ஆட்சியும் மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது. அதனால் விஜய் வந்து 2 தொகுதிகளிலும் 10 நாட்கள் முகாம் இட்டு மக்களை சந்தித்தாலும் இந்த முறை விஜய் பிம்பம் எடுபடாது. திமுக அல்லது அதிமுக வுக்கு இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்று உளவுத்துறை தகவல் தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்